மத்திய கிழக்கு நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா.. மளமளவென சரிந்த கச்சா எண்ணெய் விலை.. பின்னணி!

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தற்போது கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

துபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தற்போது கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.

சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது.சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இது உலகம் முழுக்க 22 நாடுகளில் பரவி உள்ளது. கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 2778 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 78824 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

உலகம் முழுக்க பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது. 25 நாடுகளில் விமான போக்குவரத்து குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் எரிபொருள் தேவை குறைந்துள்ளது. சீனாவில் மொத்தமாக விமான போக்குவரத்து, சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய கச்சா எண்ணெய் கொள்முதல் நாடான சீனா கச்சா எண்ணெய் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள்

மத்திய கிழக்கு நாடுகள்

அதேபோல் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மத்திய கிழக்கில் உள்ள 9 நாடுகளில் மொத்தம் 7 நாடுகளில் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. முக்கியமாக லெபனான், ஈரான், ஈராக், குவைத், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளுக்கு ஈரானிடம் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தார் எப்படி

கத்தார் எப்படி

கத்தாரில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கத்தாரில் நிறைய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது கச்சா எண்ணெய் வேகமாக விலை குறைந்து வருகிறது. அதன்படி தற்போது கச்சா எண்ணெய் விலை 11.5% சரிந்துள்ளது. வெறும் 6 நாட்களில் இவ்வளவு பெரிய சரிவை சந்தித்துள்ளது. கடந்த 1 வருடத்தில் இதுதான் மிக குறைவான கச்சா எண்ணெய் விலை ஆகும்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

ஜனவரி 2019ல் இதே விலையில்தான் கச்சா எண்ணெய் விற்றது. பிரென்ட் கச்சா எண்ணெய் ரகம் மட்டும் 2.77% குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. சில இடங்களில் பெட்ரோல் டீசல் ஐந்து பைசா மட்டும் குறைக்கப்பட்டு இருக்கிறது. டெல்லியில் பெட்ரோல் விலை 71.46 ரூபாய்க்கும், டீசல் விலை 64.65 ரூபாய்க்கும் விற்கிறது. மும்பையில் பெட்ரோல் விலை 77.62 ரூபாய்க்கும், டீசல் விலை 67.75 ரூபாய்க்கும் விற்கிறது.

சென்னை எப்படி

சென்னை எப்படி

பெங்களூரில் பெட்ரோல் விலை 74.41 ரூபாய்க்கும், டீசல் விலை 66.84 ரூபாய்க்கும் விற்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை 74.75 ரூபாய்க்கும், டீசல் விலை 68.27 ரூபாய்க்கும் விற்கிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 76.47 ரூபாய்க்கும், டீசல் விலை 70.42 ரூபாய்க்கும் விற்கிறது. அதேபோல் கொரோனா காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கி உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்செக்ஸ் தற்போது 38,661.81 புள்ளிகளிலும் நிஃப்டி 11,321.30 புள்ளிகளிலும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+