உலகின் மிக மோசமான குற்றவாளி.. கண் அசைத்தால் ஊரே காலி.. துபாயில் கைது.. உடனே நாடுகடத்தல்!
துபாய்: உலகின் மிக கொடூர க்ரைம் கும்பலின் தலைவர் சமீபத்தில் தான் அமீரகத்தில் இருந்து அயர்லாந்து நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையில், அந்த கேங் லீடர் மிக பாதுகாப்பாக அமீரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அயர்லாந்திலும் அவருக்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சர்வதேச அளவில் செயல்படும் க்ரைம் கேங் ஒன்றுக்கு தலைமை தாங்கிய டேனியல் கினஹான் என்பவனை ஐக்கிய அமீரகத்தில் இருந்து அயர்லாந்துக்கு அரசு விமானத்தில் அழைத்து சென்றுள்ளது. அயர்லாந்தில் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

என்ன நடந்தது!
49 வயதான கினஹான், கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி ஐக்கிய அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். அவரை அயர்லாந்துக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட இறுதி மேல்முறையீடும் சமீபத்தில் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து கினஹானை ஏற்றி சென்ற அயர்லாந்து அரசு விமானம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.19 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டது.
அடுத்து என்ன
கினஹான் அயர்லாந்து மண்ணில் கால் வைத்தவுடனேயே அவர் மீது குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட உள்ளன. அதன் பின்னர் அந்நாட்டு காவல்துறை, அவரை நேரடியாக சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லவுள்ளனர். அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலையே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கினஹானின் வருகையை முன்னிட்டு அயர்லாந்து சிறைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. மேலும், கினஹானை பாதுகாப்பாக அழைத்து செல்லவும் கூடுதல் அதிகாரிகள் களமிறக்கப்பட்டிருந்தனர்.
பாதுகாப்பு
அயர்லாந்தில் கினஹானை பத்திரமாக சிறைக்கு அழைத்து செல்லவே அதிநவீன வாகனத்தை அயர்லா்நது ரெடி செய்திருந்தது. இந்த வாகனம் குண்டு மற்றும் துப்பாக்கி தாக்குதல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ந்த காரின் எரிபொருள் டேங்க் மற்றும் சஸ்பென்ஷன் சிஸ்டத்தை எவ்வளவு தான் தாக்குதல் நடத்தினாலும் சேதப்படுத்தவே முடியாதாம். மேலும், டயர்கள் பஞ்சரே ஆனாலும் தொடர்ந்து குறிப்பிட்ட தூரம் வரை ஓடுமாம்.
மேலும், அழைத்து செல்லப்படும் பாதைகளில் ஸ்னைப்பர் வீரர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டேனியல் கினஹானின் நெருங்கிய கூட்டாளியான சீன் மெக்கவர்ன் துபாயில் இருந்து அயர்லாந்துக்கு நாடு கடத்தப்பட்டபோதும் இதேபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் கொடூர குற்றவாளி
கினஹான் குடும்பத்தினர் கினஹான் கேங்கை நடத்தி வருகிறார்கள். இந்த கேங் சர்வதேச அளவில் செயல்படும் க்ரைம் கேங்காக கருதப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை இந்த கேங் தொடர்ந்து செய்து வருகிறது. குறிப்பாக போதை பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தலில் மட்டும் இந்த கேங் 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததாம். மேலும், பலரை கொடூரமாக கொலையும் செய்துள்ளது. சுமார் 12 கேங் கொலைகளில் இவர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
கினஹானை கைது செய்யும் நடவடிக்கையில் அமெரிக்காவும் ஈடுபட்டிருந்தது. 2022ஆம் ஆண்டு, கினஹான் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களுக்கு $5 மில்லியன் வரை வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்தது. டேனியல் கினஹான் மற்றும் அவரது தந்தை, சகோதரர் என யாரை பற்றி துப்பு கொடுத்தாலும் வெகுமதி கரப்போவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. பல ஆண்டு தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகே இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
