தோனி வாரிசு வந்தாச்சு.. டெஸ்ட் ஆட்டம்.. ஆர்சிபி வீரர் படிக்கலை பயங்கரமா கலாய்க்கும் மீம்ஸ்
துபாய்: ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல், வரவர தோனி மாதிரி ஆட ஆரம்பித்து விட்டார் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
ஐபிஎல் உலகில் கால் வைத்தபோது இவர் ஷாட் ஆடும் ஸ்டைல் யுவராஜ் சிங் போல இருக்கிறது என்று ரசிகர்கள் சிலாகித்தார்கள். ஆனால், அவர் நம்பகமான பேட்ஸ்மேனாக
களத்தில் தொடர்ந்து நிற்கிறாரே தவிர ஸ்ட்ரைக் ரேட்டை 150 அளவுக்கு கொண்டு செல்லும் அதிரடி வீரராக இல்லை.
வசதியான பந்துகளை பவுண்டரி, சிக்சர் விளாசிவிட்டு, மற்ற பந்துகளுக்கு மரியாதை கொடுக்கும் ஒரு ஒருநாள் கிரிக்கெட் ஆட்டக்காரருக்கே உரித்தான பார்முலா அவரிடம் இருக்கிறது.

படிக்கல் ஆட்டம்
ரிஸ்க் எடுப்பது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதை போல என்று கூறி அடிக்கும் டி20 ஆட்டம் அவரிடம் இல்லை. அதிலும் குறிப்பாக நேற்று ஹைதராபாத் டீமுக்கு எதிராக ஓப்பனிங்கில் இறங்கி 52 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார் படிக்கல். ரன்னை
அதிகரிக்க வேண்டிய நேரத்தில் விக்கெட்டை பறி கொடுத்தார். கிட்டத்தட்ட டெல்லிக்கு எதிராக தோனி ஆடிய அதே மாதிரி டெஸ்ட் இன்னிங்ஸ்தான் இதுவும்.
தோனி டெல்லி அணிக்கு எதிராக 27 பந்துகளில் 18 ரன்களை எடுத்துவிட்டு அடித்தாட வேண்டிய நேரத்தில் அவுட்டானார்.
படிக்கல் ஆரம்பத்திலேயே அடித்திருக்கலாம். ஆனால், விராட் கோலி விக்கெட், தேவையில்லாமல் ஒன்டவுன் அனுப்பப்பட்டு ஒரு ரன்னில் நடையை கட்டிய டேனியல் கிறிஸ்டியன் என அடுத்தடுத்து வீரர்கள் அவுட்டானதும், டி20 கியரை அப்படியே
டெஸ்ட் மேட்ச் கியராக மாற்றிவிட்டார் படிக்கல். அல்லது இருமுனையிலும் விக்கெட்டுகள் வீழ்த்திருக்கும். ஆனால், 20 ஓவர் போட்டிகளில் விக்கெட்டுகளை விட ரன் ரேட் முக்கியம் என்ற பாடத்தை அவர் மறந்து விட்டார். இந்த நிலையில்தான், தோனியின் வாரிசு என்று, படிக்கல் குறித்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்கிறார்கள். இதோ சில மீம்ஸ் நீங்களே பாருங்கள்.

என்னோட வாரிசு
என்னோட வாரிசு என்று தோனி இந்த ஆட்டத்தை பார்த்து வர்ணித்தால் எப்படி இருக்கும் என்று பாகுபலி காட்சியை வைத்து காமெடி செய்துள்ளது இந்த மீம்.

ஆர்சிபி வீரர்கள் குஷியோ குஷி
அணி வென்றால் இப்படி வீரர்கள் டக்கவுட்டிலிருந்து மைதானத்திற்குள் ஓடுவார்கள். ஆனால் படிக்கல் அவுட்டானதும், அப்பாடா.. என்று, ஆர்சிபி வீரர்கள் மகிழ்ச்சியில் ஓடியிருப்பார்கள் என கேலி செய்கிறது இந்த மீம்.
Recommended Video

அடித்த ரன்கள் வீணாகப் போனது
மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி ரன்னை குவித்தால், படிக்கல், அந்த வேகத்தை குறைத்தார் என்பதற்கு, மணலை அள்ளி போடும் ஒரு தொழிலாளரையும், அந்த மண்ணை எடுத்த இடத்திலேயே வீசும் இன்னொரு தொழிலாளரையும் ஒப்பிட்டு கிண்டல் செய்கிறது இந்த மீம்.

அந்த வேதனை இருக்கே, வேதனை
படிக்கல் ரன் அடிக்கும்போது ஆர்சிபி வீரர்கள் வெளியே இருந்து கைதட்டியிருக்கலாம். ஆனால் அது முகமூடிதான். உள்ளே கடுப்பு கண்களில் தெரிகிறது என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.

என்ன ஒரு வில்லத்தனம்
படிக்கல் மொத்த டீமையும் கெடுத்துவிட்டார். நன்கு ஆடிய மேக்ஸ்வெல்லை ரன் அவுட்டும் செய்துவிட்டார். வீடு எரியும்போது சிரிக்கும் குழந்தை மாதிரிதான் படிக்கல் என கிண்டல் செய்கிறது இந்த மீம்.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!










Click it and Unblock the Notifications