துபாயில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் 'நம்மில் ஒருவர்' விழா! மும்முரமாக நடைபெறும் முன்னேற்பாடுகள்!
துபாய்: துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச எக்ஸ்போவில் பங்கேற்க செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, வெளிநாடு வாழ் தமிழர் இந்தியச் சங்கம் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

192 நாடுகள் பங்கேற்றுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் கண்காட்சியில் பங்கேற்பதற்காக இம்மாத இறுதியில் இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் செல்கிறார். இவரது துபாய் பயணத்தை திருவிழா போல் கொண்டாட திட்டமிட்டுள்ள வெளிநாடு வாழ் தமிழர் இந்தியச் சங்கம் அதற்கான முன்னேற்பாடுகளை அதன் தலைவர் எஸ்.எஸ்.மீரான் தலைமையில் செயல்படுத்தி வருகிறது.

துபாய் வரும் முதலமைச்சர் ஸ்டாலினை அழைத்து 'நம்மில் ஒருவர்' என்ற பாராட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ள வெளிநாடு வாழ் தமிழர் இந்தியச் சங்கம், அது தொடர்பான தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., 'நம்மில் ஒருவர்' நிகழ்ச்சியை நடத்துவது குறித்து துபாயில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

மேலும் அங்கு பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் திமுக ஆட்சி பொறுப்பெற்றவுடன் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் கருதி அவர்களுக்கென்று அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாடு வாழ் தமிழர் இந்தியன் சங்கத்தின் ஐக்கிய அரபு அமீரக தலைவராக உள்ள எஸ்.எஸ். மீரான் தமக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை சிறப்புடன் நிர்வகித்து வருவதாகவும் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமீரக வாசக குழுமத்தை சேர்ந்த ஆசிஃப் மீரான்,ஜெஸிலா, மற்றும் பிளாக் துலிப் எஹியா, ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீத் யாசின், அபுதாபி நடராஜன்,பவர் குரூப் ஜாஹிர் உசேன், உள்ளிட்ட தமிழ் சங்க அமைப்புகளை சேர்ந்தோரும், திமுக அயலக அணி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இதனிடையே துபாயில் முதல்வர் பங்கேற்க இருக்கும் நம்மில் ஒருவர் விழாவில் கலந்துகொள்ள விரும்புபவர்களுக்கு அதற்கான அனுமதி படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
-
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications