ஆனானப்பட்ட துபாயில்.. அவ்வளவு காசு இருந்தும்.. ஊருக்குள் தண்ணீர் தேங்குவது ஏன்? இதுதான் காரணம்
துபாய்: வரலாற்றில் ஏற்படாத மிகப்பெரிய வெள்ளம் துபாயில் ஏற்பட்டுள்ளது. துபாயின் முக்கிய சாலைகள் கடுமையான வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அங்கே மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட முக்கியமான காரணம் உள்ளது. அதெல்லாம் சரி அவ்வளவு பொருளாதாரம் இருந்தும் அரபில் இருக்கும் துபாய் போன்ற நாடுகள் வெள்ளத்தில் மூழ்க என்ன காரணம்?
வழக்கமாக வறண்ட காலநிலை மற்றும் வெப்பமான வெப்பநிலையை அனுபவிக்கும் துபாய், நேற்று ஏற்பட்ட கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. 1 நாள் முழுக்க பெய்ய வேண்டிய மழை 1 மணி நேரத்தில் பெய்த காரணத்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) நீரில் மூழ்கி உள்ளது. 1 வருடத்தில் பெய்ய வேண்டிய மழை 1 நாள் முழுக்க பெய்துள்ளது. மொத்தமாக ஒரே நாளில் 250 மிமீ மழை பெய்துள்ளது. அங்கே 75 வருடங்களில் இல்லாத கொடூரமான மழை ஆகும் இது.

இதனால் சாலைகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. விமானப் பயணம் நிறுத்தப்பட்டு உள்ளது. பாலைவனமான துபாய் தற்போது சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு தத்தளித்து கொண்டு இருக்கிறது.
துபாயில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தை உலுக்கி உள்ளன. துபாய் மால் மற்றும் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் போன்ற முக்கிய ஷாப்பிங் சென்டர்கள் உட்பட நகரின் முக்கிய உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருக்கின்றன.
துபாய் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட கணுக்கால் ஆழம் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டு இருக்கிறது. சாலைகளில் நீர் நிரம்பி வாகனங்கள் மிதந்து கொண்டு இருக்கின்றன. குடியிருப்பு வளாகங்கள் பல நீரில் மூழ்கின, மேலும் பல்வேறு வீடுகளில் கூரைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்களில் இருந்து கசிவுகள் ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது.
துபாய் வெள்ளத்தை கற்பனை செய்ய முடியாதவர்கள் சென்னை வெள்ளத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். சென்னை வெள்ளத்தை போலவே கொடூரமான வெள்ளம்தான் அங்கே ஏற்பட்டு உள்ளது. 1999க்குப் பின் அதிக மழைப்பொழிவால் துபாய், சார்ஜா, அபுதாபி நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்து உள்ளது.
ஓமனில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஐ கடந்து உள்ளது. துபாயில் அதிகாரபூர்வமற்ற முறையில் 5 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
என்ன காரணம்: அதெல்லாம் சரி அவ்வளவு பொருளாதாரம் இருந்தும் அரபில் இருக்கும் துபாய் போன்ற நாடுகள் வெள்ளத்தில் மூழ்க என்ன காரணம்? என்று கேட்கிறீர்களா?
சென்னையில் இருக்கும் வெள்ள வடிகால் அமைப்பு போன்ற அமைப்புகள் அங்கே இல்லை. காரணம் அங்கே இது அவசியம் இல்லை. துபாயில் இது போன்ற மழை என்பது அபூர்வத்திலும் அபூர்வம். கனடாவில் வீடுகளில் ஹீட்டர் இருக்கும். குளிக்கும் ஹீட்டர் அல்ல.. வீடுகளை சூடாக்கும் ஹீட்டர். ஏசிக்கு எதிரானது. ஏனென்றால் அங்கே கடும் பனி இருக்கும்.
அதுவே சென்னையில் அந்த வசதி இருக்காது. ஏனென்றால் சென்னைக்கு பனி, குளிர் இருக்காது. அதேபோல்தான் துபாயில் வெள்ளம், மழை எல்லாம் அபூர்வம் என்பதால் அங்கே வெள்ள வடிகால் வசதிகள் அரசால் செய்யப்படவே இல்லை.
இருக்கும் வடிகால் கூட குறைந்த பட்ச தண்ணீரை வெளியேற்றவே உதவும். இதனால் அங்கே ஏற்பட்ட வெள்ளம் வடிய சில சமயம் எடுக்கும் என்றே கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications