“ராயன்” முழுக்க ரத்த வாடை.. ஆனால் தங்கலான், மெய்யழகனை மறந்தது எதனால்..? பழைய கதையை தோண்டும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்ட விஷயம் ஒன்றே ஒன்றுதான்.. அது "ராயன்" படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது அது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் தனுஷுக்கு வாழ்த்துக்கள் சொல்லி பாராட்டி வரும் நிலையில், இன்னொரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ராயன் படம் முழுக்க வன்முறை, ரத்தம், பழிவாங்குதல், கொலைகள் என கதை பயணிக்கிறது. இப்படிப்பட்ட படத்திற்கு தேசிய விருதா? நடிகர் விக்ரமின் தங்கலான், கார்த்தியின் மெய்யழகன், ஊர்வசியின் ஜே பேபி போன்ற நல்ல படங்களை விட்டுட்டு ராயனுக்கா தேசிய விருது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கேள்வி நியாயமானது தான். குறிப்பாக தங்கலான் படத்திற்காக விக்ரம் கொடுத்த உழைப்பை யாராலும் மறுக்க முடியாது.

தேசிய விருது சர்ச்சை

தங்கலான் படத்தின் தன்னுடைய கேரக்டருக்காக உடல் எடையை குறைத்த விக்ரம் முகத்தோற்றத்தை முற்றிலும் மாற்றியிருந்தார். மேக்கப் இல்லாமல் மண்ணில் புரண்டு நடிப்பு, வசனம் பேசுமிடம், உடல் மொழி வரை ஒவ்வொரு விஷயத்தையும் மாற்றி நடித்திருந்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் கோலார் தங்க சுரங்கத்தையே வரலாற்றையும் மையமாக வைத்து உருவான அந்த படம் தொழில்நுட்ப ரீதியாகவும் நடிப்பு ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது.

மெய்யழகனுக்கு கிடைக்காத விருது

அதேபோல மெய்யழகன் திரைப்படமும் பலரது மனதை தொட்ட படம். உறவுகள், மனிதநேயம், மன்னிப்பு, பாசம் போன்ற பல உணர்வுகளையும் மிக மென்மையாக சொன்ன அந்தப் படத்தை இன்று பலர் தேசிய விருதுக்கு தகுதியான படமாக சொல்லி வருகிறார்கள். ஆனால் இங்கு தான் நெட்டிசன்கள் ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள்.

Raayan Dhanush Meiyazhagan Thangalaan National Film Awards Vikram Tamil Cinema Kollywood

இந்த படங்கள் திரையரங்குகளில் வெளியான போது அதே ரசிகர்கள் என்ன செய்தார்கள்? மெய்யழகன் வெளியான முதல் சில நாட்களில் சோசியல் மீடியாவில் வந்த விமர்சனம் என்ன? படம் ரொம்ப ஸ்லோ... சீரியல் மாதிரி இருக்கு.., தியேட்டர்ல உட்கார்ந்து பார்க்க பொறுமை வேண்டும்.. எப்போது முடியும் என்று தெரியவில்லை... கார்த்தி பேசிக்கொண்டே இருக்கிறார்.. என்று பல விமர்சனங்கள் வந்தது.

ஓடிடியில் மாறிய நிலை

அந்த நேரத்தில் படம் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. ஆனால் ஓடிடியில் வந்த பிறகு அந்த படத்தை பார்த்தவர்கள் இப்படி ஒரு படத்தை மிஸ் பண்ணிட்டோமே, இதுதான் உண்மையான சினிமா கண்டிப்பாக தேசிய விருது வாங்கணும் என்று பேச ஆரம்பித்தார்கள். இன்று அந்த படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்று பலர் வரகிறார்கள் இந்த வருத்தம் உண்மைதான்.. ஆனால் படம் வந்தபோது முதல் விருதை ரசிகர்களை கொடுத்தார்களா? என்று கேள்விகளும் எழுகிறது.

தங்கலானுக்கும் இதே கதையே. விக்ரமின் உழைப்பை எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால் படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. சிலர் படம் புரியவே இல்லை என்றார்கள். சிலர் மிகவும் மெதுவாக நகர்கிறது என்றார்கள். ஆனால் இப்போது தேசிய விருதில் அந்த படம் இடம்பெறாத போது தான் விக்ரமுக்கு விருது கிடைத்திருக்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பதிவுகள் குவிந்து வருகிறது.

நெட்டிசன்கள் பதிலடி

இதற்கு முன்பு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, தமிழ் படங்கள் அதிகமான விருதுகள் கிடைக்கவில்லை என்ற வருத்தம் பலருக்கும் இருந்தது. ஆனால் இப்போது தமிழ் படங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கிறது ஆனாலும் அந்த படத்திற்கு கிடைக்கவில்லை, இந்த படத்திற்கு கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் கேள்விக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

அதுபோல படத்திற்கான விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது என்பது குறித்து இதில் ஜூரியாக இருந்த கலா மாஸ்டரும், மற்றவர்களும் பேசும்போது தேசிய விருதுகள் வழங்கப்படும் போது ஒரு படத்தின் வசூல், ரசிகர்கள் கூட்டம் அல்லது சோசியல் மீடியா டிரெண்ட்டை மட்டும் பார்த்து வழங்கப்படுவதில்லை. இயக்கம், தொழில்நுட்பம், திரைக்கதை உருவாக்கம், கலைநயம் போன்ற பல அம்சங்களை அடிப்படையாக வைத்து ஜூரி குழு முடிவு எடுக்கிறது என்று கூறுகிறார்கள்.

அதனால் தான் ஒரு படத்தை ரசிக்காத ரசிகர்களும் இருக்கலாம். அதே படத்தை ஜூரி உயர்வாக மதிப்பிடவும் முடியும் என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த முறை தேசிய விருது விவாதம் ராயனுக்கு ஏன் விருது என்ற கேள்வியை தாண்டி நல்ல படங்களை நாம் சரியான நேரத்தில் ஆதரிக்கிறோமா? என்று பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+