உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறிய துபாய்.. இனி எங்கெங்கும் டிஜிட்டல்.. பூரித்து சொன்ன இளவரசர்
துபாயில் அரசாங்க துறையானது, முற்றிலும் 100 சதவீதம் காகிதமற்றது என்று அறிவித்துள்ளது
அபுதாபி: முற்றிலும் 100 சதவீதம் காகிதமற்ற அரசாக மாறியுள்ளது துபாய் என்று, நாட்டின் பட்டத்து இளவரசரும், நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹாம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மேக்தம் அறிவித்துள்ளார்..

துபாயை டிஜிட்டல் நகரமாக மாற்றுவதற்கான முயற்சியை இளவரசர் கையில் எடுத்தார்.. இதற்காகவே, கடந்த 2018-ல் காகிதமில்லா திட்டத்தையும் அதிரடியாக அறிவித்தார்.
இதையடுத்து, இந்த திட்டம் 5 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது... அவை ஒவ்வொன்றும் துபாய் அரசாங்கத்தின் வெவ்வேறு குழுக்களை பட்டியலிட்டன...
கடைசி 5வது கட்டத்தின் முடிவில், துபாயில் உள்ள 45 அரசு துறைகளும் காகிதமற்றவை, இதன் மூலம், இந்த துறைகள் 1800 டிஜிட்டல் சேவைகளை செயல்படுத்தின என்றும், இது 336 மில்லியன் ஆவணங்களை சேமித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்...இதையடுத்து, உலகின் முதல் காகிதம் இல்லாத அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது.
இதை இளவரசர் ஒரு அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.. "புதுமை, படைப்பாற்றல், மற்றும் வருங்காலத்தில் தீவிரமான கவனம் செலுத்துதல் போன்ற நோக்கங்களில் வாழ்க்கையை அதன் எல்லாவிதமான அம்சங்களிலும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான துபாயின் பயணத்தில் இன்று ஒருபுதிய கட்டத்தின் தொடக்கம் அரங்கேறி உள்ளது. நாங்கள் காகிதம் இல்லாத அரசாங்கத்திற்கு ஒரு முழு மாற்றத்தை இன்று நிறைவு செய்துள்ளோம்.. எங்களின் தலைமையின் லட்சிய பார்வையை எங்கள் நாட்டு மக்களால் நிறைவேற்றுவதை கண்டு நாங்கள் பூரிப்படைகிறோம்.
உலகின் முன்னணி டிஜிட்டல் மூலதனமாக மேம்படுத்த, கஸ்டமர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்தும் அரசாங்க செயல்பாடுகள், மற்றும் சேவைகளை வடிவமைப்பதில் அதன் சுயவிவவரத்தை ரோல்மாடலாக வலுப்படுத்தவும், இந்த நாட்டு மக்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.." என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications