துபாயில் முஸ்லீம் அல்லாதவர்கள் திருமணம் செய்ய முடியுமா? பலருக்கும் தெரியாத விஷயம்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பலரும் அங்கு திருமணம் செய்துகொள்ள முடியுமா, அதற்கான விதிமுறைகள் என்ன, எந்தெந்த ஆவணங்கள் தேவை என்பது குறித்து சந்தேகம் கொண்டுள்ளனர். குறிப்பாக, முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினர் துபாயில் திருமணம் செய்து கொள்ள அந்நாட்டு சட்டத்தில் இடம் இருக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.. அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்!

இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வேலைக்காக அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமீரகம் இருக்கிறது. அப்படிப்பட்ட அமீரகத்தில் முஸ்லீம் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா.. அதற்கான சட்ட வாய்ப்புகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

Dubai India marriage Dubai Marriage Rules

அமீரகம்

ஐக்கிய அமீரகத்தின் சட்டத்தின் கீழ், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினரும் அங்கு திருமணம் செய்து கொள்ளலாம். இந்த சட்டம் திருமணம் மட்டுமின்றி விவாகரத்து, குழந்தைகள் பாதுகாப்பு, வாரிசு உரிமை உள்ளிட்ட குடும்ப விவகாரங்களையும் ஒழுங்குபடுத்துகிறது.

துபாயில் சிவில் திருமணம் செய்து கொள்ள சில முக்கிய நிபந்தனைகள் உள்ளன. முதலில் இருவரும் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். அடுத்து இருவருக்கும் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். மேலும், இருவரில் குறைந்தபட்சம் ஒருவராவது துபாய் குடியிருப்பாளராக இருக்க வேண்டும். இருவரும் திருமணம் செய்துகொள்ள சட்டப்பூர்வ தகுதி பெற்றிருக்க வேண்டும். இருவரும் திருமணத்திற்கு தங்களது சம்மதத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இருவரும் ஏற்கனவே திருமணமானவர்களாக இருந்தால், விவாகரத்திற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்

திருமணத்திற்கான விண்ணப்பத்தில் இருவரது அடையாள அட்டைகள் மற்றும் திருமண நிலையை நிரூபிக்கும் ஆவணங்கள் தேவைப்படும். இருவரது பாஸ்போர்ட் நகல், அமீரக ஐடி தேவை. மேலும், விவாகரத்து பெற்றவர்களாக இருந்தால் அதற்கான ஆவணம் அல்லது முன்னாள் துணையின் இறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்!

இந்த ஆவணங்கள் பிடிஎஃப் வடிவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். வெளிநாட்டில் வழங்கப்பட்ட ஆவணங்களுக்கு சம்பந்தப்பட்ட நாட்டின் வெளியுறவு அமைச்சகம், அமீரக தூதரகம் மற்றும் அமீரக வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் அங்கீகாரம் தேவைப்படலாம். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால் கவனம்! ஆவணங்கள் அரபு மொழியில் இல்லாவிட்டால், அமீரக நீதித்துறை அங்கீகரித்த சான்றளிக்கப்பட்ட அரபு மொழிபெயர்ப்பு தேவைப்படும். வெளிநாட்டில் வழங்கப்பட்ட ஆவணங்களுக்கும் உரிய அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

எப்படி திருமணம் நடைபெறும்?

தம்பதியினர் திருமணத்திற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். திருமண அதிகாரி முன்னிலையில் இருவரும் தங்களது சம்மதத்தை தெரிவிக்க வேண்டும். தேவையான நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு திருமண ஒப்பந்தம் பதிவு செய்யப்படும். இதற்காக இருவரும் நேரில் அல்லது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் ஆஜராக வேண்டும். மேலும், ஒர்ஜினல் அடையாள ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எல்லாம் சரியாக இருந்தால் 24 மணி நேரத்தில் திருமணம் நடைபெறும்!

பல வழிகள் உள்ளன

இந்த திருமணத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இது மத சடங்குகள் இல்லாமல் சட்டப்பூர்வமாக நடைபெறும் திருமணமாகும். இருவரின் சம்மதமே இதன் அடிப்படையாக இருக்கும். அதே நேரத்தில், முஸ்லிம் அல்லாதவர்கள் தங்களது மதத்தை பொறுத்து அங்கீகரிக்கப்பட்ட தேவாலயம், இந்து கோயில் அல்லது சீக்கிய குருத்வாரா போன்ற மத நிறுவனங்களிலும் திருமணம் செய்து கொள்ளும் ஆப்ஷனும் இருக்கிறது. மேலும், தங்களது நாட்டின் தூதரகம் அல்லது துணை தூதரகம் திருமண சேவைகளை வழங்கினால் அங்கும் திருமணம் செய்து கொள்ளலாமாம்!

இப்படி துபாயில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்கு திருமணம் செய்துகொள்ள சட்டப்பூர்வமான பல வழிகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+