ஷார்ஜா மன்னர் குறித்த முதல் தமிழ் நூல்! துபாயில் நடைபெறும் அறிமுக விழாவில் பங்கேற்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஷார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமியின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஷார்ஜாவின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்புகளை விளக்கும் முதல் தமிழ் நூல் 'ஷார்ஜாவின் சிற்பி'. ஊடகவியலாளரும் எழுத்தாளருமான முதுவை ஹிதாயத் எழுதியுள்ள இந்நூல், அண்மையில் நடைபெற்ற 45-வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரகப் பிரிவு சார்பில் இந்நூலின் இணையவழி (ஆன்லைன்) அறிமுக விழா நாளை (நவம்பர் 14, சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அமீரக நேரப்படி மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், இந்திய நேரப்படி இரவு 8 மணி முதல் 9.30 மணி வரையிலும் இந்த நிகழ்வு நடக்கிறது.

dubai

இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகம்மதலி தலைமை தாங்கும் இவ்விழாவில், முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஹ்ரூப் முன்னிலை வகிக்கிறார். இதில் இலங்கையைச் சேர்ந்த காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், துபாய் அல் ரீம் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது அபுதாஹிர், நிதி ஆலோசகர் முனைவர் ஆ. முகம்மது முகைதீன், மதுரை உதவிப் பேராசிரியர் முனைவர் சே. முனியசாமி மற்றும் கவிஞர் நூர் பாத்திமா ஆகியோர் நூல் குறித்து உரையாற்றுகின்றனர். இறுதியில் நூலாசிரியர் முதுவை ஹிதாயத் ஏற்புரையாற்றுகிறார்.

Dubai

உலகம் முழுவதும் உள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் இந்த ஆன்லைன் நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்க உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+