சத்தமே இல்லையே.. துபாய் இளவரசி மஹ்ராவுக்கு கல்யாணம்! "கோடீஸ்வர மாப்பிள்ளை!" யார் தெரியுமா?
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன், ஷேக் மனா பின் முஹம்மது பின் ராஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றதாக அரசு குடும்பம் உறுதிபடுத்தி உள்ளது.
அரபு நாடுகளில் எண்ணெய் மற்றும் பொருளாதார வளம் நிறைந்த நாடாக இருப்பது ஐக்கிய அரபு அமீரகம். இதன் பிரதமராகவும், துணை அதிபராகவும் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் பதவி வகித்து வருகிறார். பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான அரச குடும்பத்தை சேர்ந்த இவரது மகளுக்கு அண்மையில் திருமணம் சத்தமே இல்லாமல் நடைபெற்று இருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட மாகாணங்கள் உள்ளன. இதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தலைவர்கள் உள்ளன. ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முஹம்மது பின் ராஷித்தின் கட்டுப்பாட்டில்தான் துபாய் உள்ளது. இவருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பிப் முஹம்மது பின் ராஷித் என்பவருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த புதன் கிழமை இருவருக்கும் துபாயில் திருமணம் அரபு முறைப்படி நடைபெற்று இருக்கிறது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச குடும்பத்தினர், அமைச்சர்கள், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு திருமண தம்பதியை வாழ்த்தினர். 1994 ஆம் ஆண்டில் பிறந்த பிறந்த துபாய் பிரதமர் ஷேக் முஹம்மது பின் ராஷித்தின் ஷேக்கா மஹ்ரா துபாயின் இளவரசி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளுக்கான பட்டப்படிப்பை நிறைவு செய்து இருக்கிறார். துபாயில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் சென்று அங்குள்ள சுவாரஸ்யமான விசயங்களையும், தன்னை படம் பிடித்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது இவரது வழக்கம். குறிப்பாக துபாய் உலகக்கோப்பையில் இவர் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் டிரெண்ட் ஆகின.
இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் மஹ்ராவுக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர். தனது தந்தையை போன்றே குதிரைகளை அதிகம் விரும்பும் ஷேக்கா மஹ்ரா, ஒட்டகங்கள், பருந்துகளையும் அதிகம் நேசிப்பவர். அவற்றோடு எடுத்த புகைப்படங்களையும் இவர் அதிகளவில் பதிவிட்டு உள்ளார்.

இவரை திருமணம் செய்து இருக்கும் ஷேக் மனா மிகப்பெரும் கோடீஸ்வரராக அறியப்படுகிறார். இவரது தந்தை ஷேக் முஹம்மது பின் ராஷித் பின் மனா அல் மக்தூம் துபாயின் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வருகிறார். ஏராளமான சமூக நலப் பணிகள், ஏழைகளுக்கு பொருளாதார உதவிகள் வழங்கியதன் மூலம் அந்நாட்டு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று இருக்கிறார்.

ஷேக் மனா ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவத்திலும் பணிபுரிந்து இருக்கிறார். அந்நாட்டில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் இடர் மேலாண்மையில் பட்டம் பெற்று இருக்கிறார் ஷேக் மனா. இவருக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் காண முடியுமாம்.
-
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
துபாயை மட்டும் தொடர்ந்து தாக்குவது ஏன்? ஈரானுக்கும் - அமீரகத்துக்கும் என்ன தான் பிரச்சனை! முழு விவரம் -
ஈரான் - அமெரிக்கா போருக்கு நடுவே.. யுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு.. ஆலோசித்தது என்ன? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்!












Click it and Unblock the Notifications