துபாய்: பாலைவன தேசத்தில் வெள்ளம்.. கொட்டப்போகும் பேய் மழை! வெதர்மேன் வார்னிங்
துபாய்: கடந்த சில ஆண்டுகளாகவே வளைகுடா நாடுகளில் அதீத கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்யும் என்றும், குறிப்பாக துபாயில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
மார்ச் மாதம் இறுதியில் இந்த மழை பெய்யும் என்றும், மழை காரணமாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

வரலாறு காணாத மழை பெய்யும்
மார்ச் 23 முதல் 28 வரை துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் மிகக் கடுமையான மழை பெய்யும். துபாயின் சராசரி ஆண்டு மழையளவே வெறும் 100 மி.மீ தான். ஆனால், இந்த 5 நாட்களில் மட்டும் 150 முதல் 200 மி.மீ வரை மழை பெய்யக்கூடும். இப்படி இயல்புக்கு மீறி மழை பெய்வது இது முதல் முறை கிடையாது.
- 2020ம் ஆண்டு ஜனவரி மாதம்: 24 ஆண்டுகளில் இல்லாத கனமழை (அல் ஐன் - 190.4 மி.மீ).
- 2022ம் ஆண்டு ஜூலை மாதம்: 27 ஆண்டுகளில் இல்லாத கனமழை (புஜைரா - 255.2 மி.மீ).
- 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம்: 75 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுச் சாதனை மழை (அல் ஐன் - 254.8 மி.மீ).
இந்த வரிசையில், மார்ச் 23 - 28ம் தேதிகளில் பெய்ய இருக்கும் மழை, 2024-ன் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய ஒட்டுமொத்த மழையும் வெறும் 2-3 நாட்களில் கொட்டித் தீர்க்கப்போகிறது.
காரணம் என்ன?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நகரும் ஒரு மிகப்பெரிய மேற்கு திசை இடையூறு மற்றும் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்படும் காற்று விலகல் ஆகியவையே இவ்வளவு பெரிய மழைக்குக் காரணம். இது மேகங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைபெற்று அதிக மழையைத் தர உதவும் கிளாசிக் சூழலாகும்.
எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
நகர்ப்புற வெள்ளம்: தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்படலாம்.
போக்குவரத்து பாதிப்பு: சாலை மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.
கட்டமைப்பு சேதம்: குறுகிய நேரத்தில் பெய்யும் அதீத மழையால் வடிகால் மற்றும் இதர கட்டமைப்புகள் சேதமடையலாம்.
அண்டை நாடுகள்: அமீரகம் மட்டுமல்லாது பஹ்ரைன், தோஹா (கத்தார்), மஸ்கட் (ஓமன்) மற்றும் சவுதி அரேபியாவின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications