சாலைகளில் தங்கம் கிடக்கிறதா? உலகின் மிகப்பெரிய தங்க வர்த்தக மையம்! துபாயில் கோல்ட் ஸ்ட்ரீட் ரகசியம்
துபாய்: காஸ்ட்லி என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது துபாய் தான்.. இப்போது இந்த துபாய் நகரம், உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு சூப்பர் விஷயத்தை செய்துள்ளது.. அதாவது 'துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்' என்ற பிரம்மாண்டமான நகையை சார்ந்த வணிக வளாகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது... இதுதான் எங்கும் பேச்சாக உள்ளது..
துபாயின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் "D33" என்ற திட்டத்தின் கீழ், தேரா பகுதியில் '"துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்" என்ற ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உருவாக்கப்பட்டுளள்து.. "தங்கத் தெரு" இந்த திட்டத்தில் ஸ்பெஷாலிட்டியாக உள்ளது..

தங்கக் கோட்டை
வழக்கமாக தெருக்களில் நகைக் கடைகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த தெருவில் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களிலேயே தங்கத்தைப் பூசி அலங்கரிக்க போகிறார்களாம்.. துபாயை உலகின் மிக முக்கியமான நகை வர்த்தக மையமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
துபாய் முதலீட்டு கழகத்தின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. கடந்த நிதியாண்டில் மட்டும் துபாய் சுமார் 53.41 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்கத்தை ஏற்றுமதி செய்து ஒரு மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது.
தங்க சாலை - துபாய்
இந்த வெற்றியின் அடுத்த கட்டமாகவே, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களை கொண்ட இந்த மாபெரும் வளாகம் அமைய உள்ளது. இது வெறும் ஒரு கடைவீதி மட்டுமல்ல, உலகத் தரம் வாய்ந்த ஒரு வணிக திருவிழா என்றே சொல்லலாம்..
இந்த வளாகத்தில் தங்கம் மற்றும் வைர நகைகள் மட்டுமின்றி, வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதன பொருட்களுக்கென தனித்தனிப் பிரிவுகள், பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான ஜோயாலுக்காஸ், தன்னுடைய மத்திய கிழக்கின் மிகப்பெரிய ஷோரூமை இங்கு அமைக்க போகிறதாம்..
சுமார் 24,000 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள இந்த ஷோரூம் அனைவரையும் அசத்திவிடும் என்றே தெரிகிறது..
இவர்களுடன் மலபார் கோல்ட், தனிஷ்க் போன்ற உலகப்புகழ் பெற்ற நிறுவனங்களும் தங்களது கிளைகளை இங்கு தொடங்குகின்றன. ஒரே இடத்திலேயே சில்லறை விற்பனை, மொத்த வியாபாரம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான அனைத்து வசதிகளும் நவீன முறையில் செய்யப்பட்டுள்ளன.
துபாயில் கோல்டு டிஸ்ட்ரிக்ட்
இந்தத் திட்டத்தின் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், இது துபாயின் பாரம்பரியமான "தேரா கோல்ட் சூக்" பகுதியுடன் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் துபாயின் பழைய கலாச்சாரத்தையும், நவீன காலத்து வசதிகளையும் ஒரே இடத்தில் அனுபவிக்க முடியும்.
சர்வதேச அளவில் இந்தியா, சுவிட்சர்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட 147 நாடுகளுடன் துபாய் கொண்டுள்ள வணிக உறவை இந்தத் திட்டம் மேலும் வலுப்படுத்த உதவும்.. அதுமட்டுமல்ல, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுமார் 1,000 அறைகளை கொண்ட 6 ஸ்டார் ஹோட்டல்கள் இங்கு கட்டப்பட்டுள்ளன. மேலும், மெட்ரோ ரயில் மற்றும் கப்பல் முனையங்களுக்கு அருகில் இந்த இடம் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் எளிதாக வந்து செல்ல முடியும்.
தங்கக் கட்டிகள் - வரிச்சலுகை
தங்கம் விலை இப்போதைக்கு எக்கச்சக்க விலையில் இருந்தாலும், தங்கம் வாங்குபவர்களுக்கு இங்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் மிகப்பெரிய ஈர்ப்பாக அமையும்.
தங்கத்தின் முழுமையான உலகமே இங்கே இருக்கிறது. சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட தங்கம் தொடங்கி, சுத்தமான தங்கக் கட்டிகள் வரை அனைத்தையும் இங்கே ஒரே கூரையின் கீழ் வாங்க முடியும்... தங்கத்தில் சேமிக்க நினைப்பவர்களுக்கும் இங்கே பல முதலீட்டுத் திட்டங்களும் உள்ளன.
இந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் திறக்கப்படும்போது, சாலைகளும் கட்டிடங்களும் தங்கத்தின் ஒளியில் ஜொலிக்க போகிறது.. இதை பார்க்கவே உலகெங்கிலும் இருந்து மக்கள் துபாய்க்கு கிளம்பி வரப்போகிறார்கள்..
தங்கம் சாலைகள்
அந்தத் தெருவில் சாதாரணமாக நடந்து சென்றாலே, உங்கள் நாலாபுறமும் தங்கம் ஜொலிப்பதுடன், சூரிய வெளிச்சம் படும்போது அந்தத் தெருவே ஒரு தங்கக் கோட்டைக்குள் இருப்பது போன்ற உணர்வை தருமாம்..
கோல்டு ஸ்ட்ரீட் எனப்படும் அந்த தெருவில் உள்ள கட்டிடங்களின் சுவர்கள், தூண்கள் மற்றும் அலங்கார வளைவுகள் என கட்டுமானத்திலேயே தங்கத்தைப் பயன்படுத்தியுள்ளனர்... இதனால், அந்தத் தெருவில் சாதாரணமாக நடந்து சென்றாலே, நாலாபுறமும் தங்கம் ஜொலிக்குமாம்..
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications