"நான்கு மாதங்களில் 2 டைவர்ஸ்.." ஆனா இந்த முறை சந்தோஷமாக.. துபாயை அலறவிட்ட இளவரசி செயலை பாருங்க
துபாய்: துபாய் நாட்டின் இளவரசியான ஷேக்கா மஹ்ரா முகமது ரஷீத் அல் மக்தூம் கடந்த ஜூலை மாதம் தான் தனது விவாகரத்தை அறிவித்து இருந்த நிலையில், இப்போது மீண்டும் டைவர்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஐக்கிய அமீரக நாடுகளில் முதன்மையானது துபாய். இந்த துபாய் நாட்டின் ஆட்சியாளர் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் 30 வயது மகள் துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா முகமது ரஷீத் அல் மக்தூம்.

புதிய வாசனை: இவர் கடந்த ஜூலை மாதம் தனது கணவரை டைவர்ஸ் செய்வதாக இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரங்கமாக அறிவித்தார். இதற்கிடையே நான்கு மாதங்களில் அவர் தனது பர்பியூம் நிறுவனத்தில் புதிய வாசனைத் திரவியம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். தனது நிறுவனத்தின் இந்த புதிய வாசனைத் திரவியத்திற்கு அவர் வைத்த பெயர் என்ன தெரியுமா "டைவர்ஸ்."
துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா முகமது ரஷீத் அல் மக்தூம்மஹ்ரா எம் 1 என்ற பர்பியூம் பிராண்டை நடத்தி வரும் நிலையில், புதிய வாசனைத் திரவியத்திற்கான அறிவிப்பை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார். இதற்கான டீசர் இன்ஸ்டாகிராமில் வெளியான உடனேயே அது டிரெண்டானது. அதில் உடைந்த கண்ணாடி, கருமையான இதழ்கள் மற்றும் கருப்பு சிறுத்தை போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. அதேநேரம் அப்போது அதன் பெயர் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
டைவர்ஸ்: அந்த டீசரே இணையத்தில் டிரெண்டானது. உடைந்த கண்ணாடி எல்லாம் இருப்பதால் இது என்னவாக இருக்கும் எனப் பலரும் பல கேள்விகளை எழுப்பினர். இந்தச் சூழலில் தான் அவர் வாசனைத் திரவியம் குறித்த போட்டோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். டைவர்ஸ் என்ற வார்த்தைகளுடன் அதில் பர்பியூம் பாட்டில் ஒன்று இடம் பெற்று இருந்தது.
ஷேக்கா மஹ்ரா தனது கணவரிடமிருந்து பிரிந்ததாக அறிவித்த சில வாரங்களில் இந்த டைவர்ஸ் என்ற பர்பியூமை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட ரெஸ்பான்ஸை வைத்துப் பார்க்கும் போது இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றே தெரிகிறது.

துபாய் இளவரசி: இந்த துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா முகமது ரஷீத் அல் மக்தூம் தான் கடந்த ஜூலை மாதம் தனது கணவரை விட்டுப் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில், "அன்புள்ள கணவரே, நீங்கள் எப்போதும் உங்களின் மற்ற தோழிகளுடன் தான் இருக்கிறீர்கள் என்பதால் உங்களை நான் விவாகரத்து செய்கிறேன்.. நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்.. விவாகரத்து செய்கிறேன் உன்னை விவாகரத்து செய்கிறேன். இப்படிக்கு முன்னாள் மனைவி" என்று பதிவிட்டு இருந்தார்.
ஐக்கிய அமீரகத்தின் துணை அதிபர், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் 26 குழந்தைகளில் இந்த துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா முகமது ரஷீத் அல் மக்தூமும் ஒருவர். உலக அளவில் பணக்கார அரச குடும்பங்களில் ஒருவரான ஷேக் முகமதின் மகளான ஷேக்கா மஹ்ரா சுமார் 10 லட்சம் இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்களை கொண்டுள்ளார்.
விவாகரத்து: இவர் கடந்த ஆண்டு மே மாதம், ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்ற தொழிலதிபரை மணந்தார். அவர்களுக்கு இந்தாண்டு தொடக்கத்தில் தான் முதல் குழந்தை பிறந்தது. இருப்பினும் முதல் குழந்தை பிறந்து இரண்டே மாதங்களில் துபாய் இளவரசி தனது கணவரை விட்டுப் பிரிவதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications