உயிர்களைக் காக்கத் திரண்ட துபாய் மக்கள்! கிரீன் குளோப் ரத்ததான முகாமில் 120 பேர் ஆர்வத்துடன் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் அரசின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் (CDA) அங்கீகாரம் பெற்ற தன்னார்வத் தொண்டு அமைப்பான 'கிரீன் குளோப்' (Green Globe) சார்பில், மாபெரும் ரத்ததான முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கடந்த நவம்பர் 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை, துபாய் அல் கிசைஸ் (Al Qusais) பகுதியில் உள்ள லூலூ ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் இந்த முகாம் நடைபெற்றது. 'ஒரு துளி ரத்தம் ஓர் உயிரைக் காப்பாற்றும்' என்ற உன்னத நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், பொதுமக்கள் 120 பேர் ஆர்வத்துடன் முன்வந்து ரத்ததானம் செய்தனர்.

Blood Donation Camp

கடந்த 19 ஆண்டுகளாகத் துபாயில் பல்வேறு சமூக நலப் பணிகளைச் செய்து வரும் கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

இந்த முகாமில் வழக்கறிஞர் மதுரை ஷேக் முஹம்மது, சிங்கப்பூர் சலீம் ஹாதி, இதயக்கனி பத்திரிகை விஜயன், மூத்த பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், சமூக ஆர்வலர் முஹம்மது ராசிக், பீஸ் அண்ட் கேர் முஹம்மது ரபீக், உமா மற்றும் அனிருத் குடும்பத்தினர், தீபிகா முஹாஜன், சாப்ட்வேர் பொறியாளர் ரியாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தவர்களை ஊக்கப்படுத்தினர்.

Blood Donation Camp

இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற கிரீன் குளோப் அமைப்பின் நிர்வாகிகளான சுலோச்சனா வீரகுமார், ரசூல், அபூபக்கர், அப்துல் ரஹ்மான், தாஹிர், சபீர் மற்றும் பீர் முகமது ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இவர்களுடன் இணைந்து ஏராளமான தன்னார்வலர்களும் களப்பணியாற்றினர்.

Blood Donation Camp

ரத்ததானம் வழங்கிய கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் களைப்பைப் போக்கும் விதமாக, அனைவருக்கும் சத்தான பழங்கள், பழச்சாறு, தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.

மதம், இனம் கடந்து மனிதநேயம் ஒன்றே அடையாளம் என்ற உயரிய எண்ணத்துடன் உயிர்காக்கும் இந்தச் சேவையில் பங்கேற்ற அனைவருக்கும் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Blood Donation Camp
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+