Code 7500! சட்டென உயரத்தை குறைத்த துபாய் விமானம்! நடுவானில் சிக்கிய 180 உயிர்கள்! உச்சக்கட்ட பதற்றம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயிலிருந்து புறப்பட்டு இஸ்ரேல் நோக்கி 40,000 அடி உயரத்தில் பறந்து வந்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம், சட்டென 15,000 அடியா தனது உயரத்தை குறைத்தது. மட்டுமல்லாது இந்த விமானத்திலிருந்து Code 7500 கொடுக்கப்பட்டிருக்கிறது. விமானம் கடத்தப்பட்டால் மட்டுமே இந்த எச்சரிக்கை கொடுக்கப்படும். இதனால் மொத்த இஸ்ரேலும் உச்சக்கட்ட அலர்ட் மோடுக்கு சென்றது.

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ஃபிளை துபாய் விமானம் ஒன்று புறப்பட்டது. போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தை சேர்ந்த இந்த விமானம், வானத்தில் பறந்த கொஞ்ச நேரத்திலேயே சவுதியின் தபூக் விமான நிலையத்திற்கு அவசரமாக திருப்பிவிடப்பட்டது.

Dubai to Israel Flight

நடுவானத்தில் விமானத்தில் இருந்து முதலில் பொதுவான அவசரநிலையை குறிக்கும் 7700 என்ற குறியீடு விமான கட்டுப்பாட்டு அறைக்கு கொடுக்ககப்பட்டது. என்ன நடந்தது? ஏன் அவசர நிலை என்று விசாரிப்பதற்குள், 7500 என்கிற குறியீடும் அனுப்பப்பட்டது. விமானங்கள் ஹைஜாக் செய்யப்படும்போது இந்த குறியீடு கொடுக்கப்படும்.

ஏற்கெனவே இஸ்ரேல் மீது சர்வதேச அளவில் கோபம் இருக்கிறது. இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு வரும் விமானம் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் வந்தால் எப்படி இருக்கும்? பதற்றத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்றனர் இஸ்ரேல் அதிகாரிகள். அடுத்து என்ன நடக்கும்? கடத்தல்காரர்கள் என்ன டிமாண்ட் வைப்பார்கள்? யார் இதை செய்திருப்பார்கள்? என மொத்த ராணுவமும் மண்டை காய்ந்து போனது.

உலகத்தில் மிகவும் வலுவான உளவு அமைப்பை கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு இப்படி ஒரு நிலைமையா? சர்வதேச நாடுகள் நம்மை எப்படி பார்க்கும் என்று இஸ்ரேல் அரசுக்கு வயிறு கலக்கியது. எனவே உடனடியாக தற்காலிகமாக தனது தனது வான்வெளியை மூடியது இஸ்ரேல்.

இதெல்லாம் நடந்துக்கொண்டிருந்தபோதே.. விமானத்தின் உயரம் 40,000 அடியிலிருந்து சட்டென 15,000 அடிக்கு குறைந்தது. போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் எப்போதும் இவ்வளவு குறைந்த உயரத்தில் பறக்காது. இப்படி பறப்பது தற்கொலைக்கு சமமாகும். அளவில் சிறிய விமானங்கள் இந்த உயர்த்தில் பறந்து வந்து மேலே மோத வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் திடீரென விமானத்தின் உயரம் குறைந்ததும் இஸ்ரேல் மற்றும் சவுதிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

பின்னர் கொஞ்ச நேரத்தில் விமானம் பத்திரமாக தபூக் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கிய பிறகு, விமானத்திற்குள் இருந்த 180க்கும் அதிகமான பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பின்னர்தான் விஷயம் விளங்கியது. அதாவது விமானத்திற்கு 2 பயணிகள் சண்டையிட்டுக்கொண்டதால், தவறுதலாக ஹைஜாக் குறியீட்டை விமானி கொடுத்திருக்கிறார். இந்த சம்பவத்தையடுத்து இரண்டு பயணிகளும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+