வேகமாக மாறும் துபாய்.. இந்தியர்களின் கஷ்டம் முடிவுக்கு வர போகுது.. திடீர் மாற்றத்துற்கு என்ன காரணம்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஈரான் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்ட வளைகுடா நாடுகளின் சுற்றுலா துறை தற்போது மெல்ல மீண்டு வருகிறது. அமீரகத்தில் குளிர்கால சுற்றுலா சீசன் நெருங்கி வரும் நிலையில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் துபாய் மற்றும் அபுதாபி புதிய சலுகைகள், விசா திட்டங்களை அறிவித்துள்ளன.

வளைகுடாவில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா- ஈரான் இடையே மோதல் வெடித்தது. இந்த போர் பல மாதங்கள் வரை நீடித்தன. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு செல்லவே பயந்தனர். இதனால் கடந்த சில மாதங்களாகவே அமீரகத்தில் சுற்றுலா துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. பலரும் வேலையிழந்தனர்.

UAE visa Dubai Dubai Tourism

அதிகரிப்பு

இந்த போரின் காரணமாக பயண தேவை கடுமையாக சரிந்திருந்தது. இப்போது போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் ஹோட்டல்களில் புக்கிங் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதுபோல புக்கிங் அதிகரித்துள்ளதால் ஹோட்டல் நிர்வாகங்களும் ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த தொடங்கியுள்ளன.

சலுகைகள்

துபாயில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அமீரகம் பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளன. துபாயில் வசிக்கும் நபர்கள் தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களை அழைத்து வந்தால் அவர்களுக்கு AED 3,000 (சுமார் ரூ.77,000) வரை தள்ளுபடி வவுச்சர்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அபுதாபி இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 30 நாள் விசா சலுகையை வழங்குகிறது. சில குறிப்பிட்ட சுற்றுலா பேக்கேஜ்களை தேர்வு செய்யும் நபர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். இந்த திட்டம் அக்டோபர் 31 வரை அமலில் இருக்கும்.

இன்னும் போர் சூழல் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இதனால் எமிரேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பயண தேதியை மாற்றுவது உள்ளிட்ட சில தளர்வுகளை பயணிகளுக்கு வழங்குகிறது. இதுவும் அமீரக சுற்றுலா சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இப்படி அமீரகத்திற்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வர பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். இதுபோன்ற சலுகைகளால் அமீரகம் செய்ய புக் செய்யும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹோட்டல் புக்கிங்

ஹோட்டல் புக்கிங்கள் அதிகரித்துள்ளது இதையே தான் காட்டுகிறது. தாஜ் துபாய் ஹோட்டலில் கடந்த இரண்டு மாதங்களாக ரூம் புக்கிங் விகிதம் 70 சதவீதத்தை தாண்டியுள்ளது. இதர முக்கிய ஹோட்டலில் ஜூன் மாதத்தில் 36 சதவீதமாக இருந்த ஆக்குபன்சி ரேட், ஜூலையில் 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இது 60 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பெரும்பாலான ஹோட்டல்களில் இதுவே தான் நிலைமை! ஹோட்டல் புக்கிங்கள் கணிசமாக அதிகரித்தே உள்ளன.

சுற்றுலா துறை மீண்டு வருவதால் அமீரகத்தில் இந்த துறையில் ஆட்சேர்ப்பும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு தேவை அதிகரித்துள்ளதுள்ளன. அமீரக போரின்போது பலர் வேலையிழந்த நிலையில், இப்போது கூப்பிட்டு வேலை கொடுக்கும் அளவுக்கு நிலைமை முன்னேறியுள்ளது. ஹோட்டல் புக்கிங் அதிகரித்துள்ள சூழலில், பயணிகள் வரும் முன்பே தேவையான ஊழியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சரியாகிவிடும்!

கடந்த கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சரிந்த நிலையில், குளிர்காலத்திற்குள் நிலைமை மொத்தமாக சரியாகிவிடும் என தெரிகிறது. குறிப்பாக 2026ஆம் ஆண்டின் இறுதியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் குளிர்கால விடுமுறை காலத்தில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமீரகத்திற்கு மட்டும் நல்லது இல்லை.. அங்கு பல்வேறு துறைகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கும் நல்லதுதான்! அதாவது சுற்றுலா உள்ளிட்ட துறைகள் மேம்படுவதால் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+