இஸ்ரேலுக்கு எதிராக திரளும் அரபு நாடுகள்.. காரணம் அந்த "E1.." வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: இஸ்ரேல் முன்வைத்துள்ள E1 குடியேற்ற திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட 8 அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இந்த குடியேற்ற நடவடிக்கைகளை கண்டித்து, இந்த நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலுக்கும் அங்குள்ள மற்ற நாடுகளுக்கும் எப்போதுமே ஒத்துவராது. குறிப்பாக பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலின் நிலைப்பாட்டை அனைத்து வளைகுடா நாடுகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனாலும், பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது.

Eight Arab Nations Reject Israel E1 Settlement Plan

வளைகுடா நாடுகள்

இதற்கிடையே இஸ்ரேலுக்கு எதிராக 8 அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய 8 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஜெருசலேமுக்கு கிழக்கே அமைந்துள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் E1 குடியேற்றத் திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து குடியேற்ற நடவடிக்கைகளையும் தாங்கள் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அரபு நாடுகள் தெரிவித்துள்ளன. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் சட்டவிரோத குடியேற்றக் கொள்கைகளையும் இந்த நாடுகள் கண்டித்துள்ளன.

எதிர்ப்பு

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் ஆதரவுடன் பாலஸ்தீன மக்கள் மற்றும் அவர்களின் சொத்துகள் மீது குடியேற்றம் என்ற பெயரில் நடத்தப்படும் வன்முறை செயல்களையும் அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. 'E1' குடியேற்றத் திட்டம் ஆபத்தான நடவடிக்கை என தெரிவித்துள்ள 8 நாடுகளும், இது பாலஸ்தீனத்தின் எதிர்காலத்தை மேலும் பாதிக்கும் என எச்சரித்துள்ளன.

குறிப்பாக, 1967ம் ஆண்டு எல்லைகளை அடிப்படையாக கொண்டு, கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்ட சுதந்திர நாடாக பாலஸ்தீனை உருவாக்கும் திட்டத்தை இந்த 'E1' குடியேற்றத் திட்டம் அச்சுறுத்துவதாக அரபு நாடுகள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளன. குடியேற்றத்தை அதிகரிப்பதன் மூலம், பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ள வளைகுடா நாடுகள், வெஸ்ட் பேங்கிற்கும் கிழக்கு ஜெருசலேமுக்கும் இடையிலான தொடர்பை இது சீர்குலைக்கும் என எச்சரித்துள்ளனர்.

டிரம்பிற்கு எதிராக

இந்த நடவடிக்கைகள் அமைதியை ஏற்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகளையும் நேரடியாக பாதிப்பதாக வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்திருந்த அமைதி திட்டத்தில் பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் இணைக்க கூடாது.. மக்களை கட்டாயமாக இடம்பெயர செய்யக்கூடாது என கூறப்பட்டு இருந்தது. அதையும் வளைகுடா நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐநா தீர்மானங்களுக்கு ஏற்ப, இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனைக்கு நியாயமான மற்றும் நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கான வழி என்றால் அது இரு நாடுகளை உருவாக்குவது மட்டுமே என வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த அணுகுமுறையை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையும் பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

நிறுத்த வேண்டும்

சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், சட்டவிரோத குடியேற்றங்களை ஆதரிக்கும் அமைப்புகளுக்கான நிதி மற்றும் ஆதரவையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+