பிரபல ஆபாச நடிகை.. மருத்துவமனையில் திடீர் அனுமதி.. பேச்சே வரலயாமே.. கூடவே வெளியான வீடியோ.. என்னாச்சு
பிரபல நடிகை உர்பி ஜாபத் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
துபாய்: பிரபல மாடல் அழகி உர்பி ஜாபத் உடல்நல குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.
பிரபல மாடல் உர்ஃபி ஜாவேத்.. இவர் ஒரு புகழ்பெற்ற நடிகையும் கூட.. இவரது ஆடை அலங்காரத்தினாலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.. அதே காரணங்களுக்காக பல்வேறு தரப்பினரின் அதிருப்திகளையும் சம்பாதித்து வருபவர்.
தன்னுடைய போட்டோக்களை அடிக்கடி சோஷியல் மீடியாவில் ஷேர் செய்வது இவரது பழக்கம்.. பெரும்பாலானவர்கள் அவரின் டிரஸ்கள், குறித்து அவரை ட்ரோல் செய்வதும் நடக்கும்..

கலர் கலர் நூல்
ஒவ்வொரு நாளும், மேலாடை இல்லாமல், வித்தியாசமான போட்டோக்களை பதிவிட்டு வருவார்.. ஆரம்பத்தில் இவர் ஹிந்தி சீரியல்களில் நடத்தவர்.. சீரியலில் நடித்தபோதே, பிரபல நடிகையாகிவிட்டார்.. அதற்கு பிறகு, உர்ஃபி ஜாவித், ஹிந்தி பிக் பாஸின் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. அந்த நிகழ்ச்சியில்தான், வித்தியாசமான டிரஸ் அணிவது ஃபேமஸ் ஆனது.. இப்படித்தான் ஒருமுறை, வெறும் கலர் நிற நூலை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு வந்து நின்று போஸ் தந்தார்.. முழு டிரஸ்ஸை எப்போது அணிவீர்கள்? ஆடையை கிழித்து ஏன் அணிய வேண்டும்? என்றெல்லாம் இவரை பலரும் கலாய்ப்பது இயல்பான விஷயம்..

ஓபன் டாக்
வித்தியாசமான ஆடையால் சில ஆடை வடிவமைப்பாளர்கள் தன்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை என்றும், தான்னுடைய ஆடைகளை மற்றவர்கள் கிண்டல் செய்வதால் அவர்களுக்கு என்னை பிடிப்பதில்லை என்றும் உர்ஃபி ஜாவித் வெளிப்படையாகவே ஒருமுறை கூறியிருந்தார். ஆனாலும், எதை பற்றியும் இவர் கண்டுகொள்ள மாட்டார்.. யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளவும் மாட்டார்.. தனக்கான ஸ்டைலில் மட்டுமே இருந்து வருகிறார்...

லைம் லைட்
அதேசமயம், தன்னுடைய அதிரடிகளால் பலரின் மனதையும் சில சமயம் காயப்படுத்தியும் இருக்கிறார்.. அடிக்கடி ஆபாச மற்றும் வித்தியாசமான அரைகுறை ஆடைகளை அணிந்து பொதுவெளியில் போஸ் கொடுத்து வந்ததால், எந்நேரமும் இவர் லைம்லைட்டிலேயே இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில், இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உர்பி ஜாவேத்துக்கு குரல்வளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்சமயம் துபாயில் இருக்கும் உர்பி ஜாவேத்துக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குரல்வளை அழற்சி
இதுதொடர்பான வீடியோ பதிவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உர்பி ஜாவேத் ஷேர் செய்துள்ளார்.. அந்த வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட அவரது போட்டோக்களும், சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் அவர் பேசும்போது, உர்பி ஜாவேத்தின் குரல் பாதிக்கப்பட்டிருப்பதும், அவருக்கு குரல்வளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவருகிறது... அவருக்கு பின்னால் டாக்டர் நிற்கிறார். அவருடன் உர்பி பேச முயல்கிறார்,. ஆனால் அவரால் பேசமுடியவில்லை. உர்பியின் மருத்துவமனை போட்டோக்களை பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். விரைவில் குணமாகவேண்டுமென அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications