'இந்தியா டீமா இது..' 10 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. இப்படியே போனா மூட்டை கட்ட வேண்டியது தான்
துபாய்: இன்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7 - 16ஆவது ஓவர் வரை இந்தியாவால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. இதன் மூலம் மிக மோசமான சாதனை ஒன்றையும் இந்தியா படைத்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய டி20 உலகக் கோப்பை கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு டி20 உலகக் கோப்பை தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சூப்பர் 12 போட்டிகள் கடந்த அக். 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டி20 போட்டிகளுக்கே உரித்தான விறுவிறுப்புடன் ஒவ்வொரு போட்டியும் நடந்து வருகிறது.

டி20 உலகக் கோப்பை
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இந்தியா அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை அக். 14ஆம் தேதி எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 151 ரன்களை குவித்தது. அடுத்துக் களமிறங்கிய பாகிஸ்தான் மிக எளிதாக விக்கெட் இழப்பின்றி 152 ரன்களை எடுத்தது. இதன் மூலம் பாக். 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் இந்தியா வீழ்வது இதுவே முதல் முறையாகும்.

இக்கட்டான சூழலில் இந்தியா
இந்த போட்டியில் தோற்றதன் மூலம் இந்தியா இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டுள்ளது. அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டும் எவ்வித பிரச்சினையும் இன்றி அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் நியூசிலாந்து அணியை இன்று இந்தியா எதிர்கொள்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே ஐசிசி தொடரில் நியூசிலாந்து அணியை இந்தியா தோற்கடித்ததில்லை. இந்த மோசமான வரலாற்றுக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய இந்தியாவுக்கு தொடக்கம் முதலே எதிர்பார்த்து நடக்கவில்லை.

டாஸ்
இது டாஸிலேயே தொடங்கிவிட்டது எனச் சொல்லலாம். இன்று போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் சேஸ் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். ஆனால், விராட் கோலி இந்த முறையும் வழக்கம் போல டாஸ் வெல்லத் தவறினார். டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்களாக சூர்யகுமார் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டனர்.

தொடக்கமே மோசம்
ராகுல் மற்றும் இஷான் கிஷன் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய நிலையில், சவுதி - போல்ட் பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். 3 ஓவரில் போல்ட் பந்துவீச்சில் இஷான் கிஷனும் 6ஆவது ஓவரில் சவுத்தி பந்துவீச்சில் ராகுலும் வெளியேறினர். அடுத்த வந்த பேட்ஸ்மேன்களும் கூட நீண்ட நேரம் களத்தில் நீடிக்கவில்லை. நியூசிலாந்து அணியின் அட்டகாசமான பவுலிங்கில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறியது.

பவுண்டரி இல்லை
இதனால் டிவன்ஸ் மோடிற்கு சென்ற இந்தியா, மிகவும் நிதனமாக ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. இதனால் 7ஆவது ஓவரில் தொடங்கி 16ஆவது ஓவர் வரை இந்தியாவில் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் கூட அடிக்க முடியவில்லை. நியூசிலாந்தின் அட்டகாசமான பவுலிங் இந்தியாவின் ரன் ரேட்டை வெகுவாக குறைத்தது. விக்கெட் வீழ்ந்துவிடக்கூடாது என்ற மனநிலையில் இந்தியா ஆடியது. இருப்பினும், அதையும்கூட இந்திய பேட்ஸ்மேன்களால் செய்ய முடியவில்லை. இந்த ஓவர்களில் தான் ரோகித், கோலி, பந்த் என மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்து இந்தியா தடுமாறியது.

இந்தியா திணறல்
மேலும், இந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் 7 - 15 ஓவர்கள் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்காத முதல் அணி என்ற மோசமான சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இறுதியில், 17ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஹர்த்திக் பாண்டியா பவுன்டரி அடித்து இந்த மோசமான சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்தார். கடைசி ஓவர்களிலும் கூட இந்தியாவால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்த இந்தியாவால் 110 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

குறைந்த ரன்கள்
கடந்த 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 79 ரன்களை எடுத்திருந்தது. அதன் பிறகு டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா எடுத்த குறைந்தபட்ச ரன் இதுவாகும். இந்த போட்டியில் தோற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது சிக்கல் ஆகிவிடும் என்பதால் பந்துவீச்சில் தனது முழு திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications