ஆண்களுடன் நட்பு கூடாது! லொகேஷனை கூட பகிரணும்.. துபாய் கோடீஸ்வர கணவர் மனைவிக்கு போட்ட கண்டிஷன்கள்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் வசிக்கும் பெண் ஒருவர் தனது ஆடம்பர வாழ்க்கை குறித்த தகவல்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். அவருக்கு மிகப் பெரிய பாலோயர்கள் உள்ளனர். இதற்கிடையே அந்த பெண் தனது கணவர் விதித்துள்ள கண்டிஷன்கள் என்று ஒரு லிஸ்டை பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் இரு வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பலரும் பலவிதமான கண்டெண்டுகளை பகிர்வார்கள். பெரும் பணக்காரர்கள் சிலர் தங்களின் ஆடம்பர வாழ்க்கை குறித்த தகவல்களைப் பகிர்ந்து இணையத்தை மிரள வைப்பார்கள்.

middle east dubai

அப்படி தான் துபாயைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் தனது ஆடம்பரமான வாழ்க்கை முறை குறித்து இணையத்தில் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதற்கிடையே சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ நெட்டிசன்கள் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

துபாய் பெண்: சவுதி அல் நடக் என்ற அந்த 26 வயதான பெண் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது கோடீஸ்வர கணவர் விதித்துள்ள கண்டிஷன்களை கோடிட்டுக் காட்டினார். எப்போதும் தனது கணவர் இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பார் என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் எப்போதும் அணியும் ஹேண்ட் பேக்கும் காலணியும் எப்போதும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும். மேலும், எல்லா செலவுகளையும் எனது கணவரே பார்த்துக் கொள்வார். இதனால் என்னை வேலை செய்ய அனுமதிக்கவே மாட்டார். மேலும், நான் எப்போதும் சமைக்கத் தேவையில்லை. இதனால் தினமும் வெளியே தான் சாப்பிடுவோம்" என்று அவர் தெரிவித்தார்.

ஆண் நட்பு: மேலும், எப்போதும் வெளியே செல்லும் போது மேக் அப் மற்றும் தலைமுடியை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பதும் விதியாகும். இது மட்டுமின்றி எந்தவொரு ஆண்களுடன் நட்பு இருக்கக்கூடாது என்பதும் முக்கிய விதி என்று அந்த பெண் குறிப்பிட்டார். துபாயில் உள்ள எனது கோடீஸ்வர கணவர் விதித்துள்ள கண்டிஷன்கள் என்று சொல்லி அவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

நெட்டிசன்கள்: அந்த பெண் இந்த வீடியோவை பகிர்ந்த சில நாட்களில் அது 50,000+ லைக்களையும் பல லட்சம் வியூஸையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன் ஒருவர், "பணத்தால் மகிழ்ச்சியை வாங்கவே முடியாது. ஆனால், பணம் இருந்தால் ஓரளவுக்காவது மகிழ்ச்சி கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை" என்றார். அதேபோல மற்றொரு நபர், "உங்கள் கணவர் உங்களை ஓவராக கட்டுப்படுத்துகிறார். நீங்கள் நிறைவான வாழ்க்கையை வாழவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு நபர், "எல்லாம் ஓகே. குறைந்தது உங்களுக்கு யோசிக்கவும் சிரிக்கவுமாவது அனுமதி இருக்கா.. இதுபோல இருப்பது உங்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தவில்லையா" என்று பதிவிட்டுள்ளார்.

பெண்கள் ஹேப்பி: இந்த பெண்ணுக்கு ஆறு வயது இருக்கும் போது, அவரது பெற்றோர் துபாய்க்குக் குடியேறினர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது ஜமால் அல் நடக்கை சந்தித்தார். இருவரும் காதலித்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர்கள் திருணம் செய்து கொண்டனர்.

அப்போதே அவர்கள் சில வினோத ரூல்ஸ்களை போட்டுள்ளனர். அதாவது கணவருக்கு எந்தவொரு பெண் தோழியும் இருக்கக்கூடாது. அதேபோல இந்த பெண்ணுக்கும் எந்தவொரு ஆண் நண்பரும் இருக்கக்கூடாது. மேலும், இருவரும் தங்களின் அனைத்து பாஸ்வேர்ட் லொகேஷனை மற்றவருக்குப் பகிர வேண்டும் உள்ளிட்டவை அந்த விதியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+