துபாயில் இருந்து தங்கம்! ரூல்ஸ் படி வாங்கினாலே இவ்ளோ குறைவா.. எவ்வளவு கொண்டு வர அனுமதி.. ரூல்ஸ்
துபாய்: இந்தியாவுடன் ஒப்பிடுகையில் துபாயில் தங்கம் விலை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் துபாய்க்கு சுற்றுலா போகிறவர்கள் கூட தங்கம் வாங்குகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னட நடிகை ரன்யா ராவும் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்துதான் கையும் களவுமாக சிக்கினார். துபாயில் இருந்து எவ்வளவு தங்கம் வாங்கி வரலாம்.. சுங்க வரிகளுக்கு பிறகும் தங்கம் விலை இந்தியாவில் வாங்குவதை விட குறைவா? என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. ஆனால் துபாய் போன்ற நாடுகளில் தங்கம் விலை மலிவாக உள்ளது. இப்படி விலை குறைவாக இருக்கும் காரணத்தினாலே துபாயில் இருந்து தங்கத்தை சட்ட விரோதமாக வாங்கி வந்த நடிகை ரன்யா ராவ், கையும் களவுமாக சுங்க அதிகாரிகளிடம் சிக்கியிருக்கிறார். 15 நாட்களில் 4 முறை துபாய்க்கு சென்று வந்த ரன்யா ராவ், தங்கத்தை மறைத்து கொண்டு வர பிரத்யேக ஆடை அணிந்து சென்றுள்ளார்.

துபாயில் தங்கம் விலை எவ்வளவு
இந்த ஆடையையே இவர் துபாய்க்கு செல்லும் போது எல்லாம் உடுத்தி சென்றுள்ளார். கிட்டத்தட்ட 14 .2 கிலோ தங்கத்தை இவர் கடத்தி வந்துள்ளார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரன்யா ராவ் ஏன் துபாயில் இருந்து தங்கம் வாங்கி வர வேண்டும் என்று அனைவருக்கும் கேள்வி எழ வாய்ப்பு உள்ளது. துபாயில் அப்படி தங்கம் விலை எவ்வளவுதான் விற்கிறது.. துபாயில் இருந்து சட்ட பூர்வமாக தங்கம் விலை கொண்டு வர முடியுமா? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
துபாயில் நேற்றைய நிலவரப்படி 24 கேரட் தங்கம் விலை 10 கிராம் 3,260 திர்ஹாம் ஆக விற்பனை செய்யப்பட்டது. இதை டாலராக மாற்றினால் 887.63 டாலர் ஆகும். இந்திய ரூபாய்க்கு கணக்கிட்டால் 10 கிராமின் தங்கம் விலை ரூ.77, 281.46 ஆகும். நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் ரூபாய் 87,160 (24 கேரட்) விலை ஆகும். துபாயில் இந்திய மதிப்புக்கு ஒரு கிராம் தங்கம் வாங்குவதற்கும், இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கும் உள்ள வேறுபாடு கிட்டதட்ட 11.58 சதவீதம் ஆகும். மும்பையில் நேற்று 10 கிராம் தங்கம் விலை 80,480 ரூபாய்க்கு விற்பனையானது.
சுங்க வரி ரூல்ஸ் என்ன?
துபாய்க்கு செல்லும் உறவினர்களிடம் இருந்து தங்கம் வாங்கி வர சொன்னால் செம லாபம் என நினைக்கலாம். ஆனால் அங்குதான் ஒரு செக் பாயிண்ட் இருக்கிறது. துபாயில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் தங்கம் கொண்டு வந்தால் அரசு அறிவித்த சுங்க வரி விதிகளின் படி வரி விதிக்கப்படும். தற்போது 10 கிராம் தங்கத்திற்கு 297 டாலர் வரி விதிக்கப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.25,883.33 வரியாக விதிக்கப்படும்.
ரூ.5,360 குறைவு
பிப்ரவரி 28 ஆம் தேதி இந்த வரி குறைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு முன்பு வரை 938 டாலர் ரூ.81,746.00 ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது. தங்கம் மீதான இறக்குமதி வரி என்பது தற்பொது 6 சதவீதமாக உள்ளது. 2024-25 நிதி ஆண்டில் இந்த தொகை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி பார்த்தால் துபாயில் இருந்து நீங்கள் தங்கம் வாங்கி வந்தால் 927 டாலர் மதிப்புள்ள தங்கத்திற்கு 6 சதவீத வரி விதிக்கப்படும். இந்த வரி 55.62 டாலர் ஆகும்.
இதை ரூபாயாக மாற்றினால் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.4,842 ஆகும். 55.62 டாலர் சுங்க வரி கட்டினால் கூட தங்கத்தின் விலை 943.25 டாலராக இருக்கும். ரூபாய் மதிப்புக்கு ரூ.82,119.4 ஆகும். மும்பையில் நேற்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.87,840. அதாவது துபாயில் இருந்து 10 கிராம் தங்கத்தை வாங்கி வந்து வரிகள் எல்லாம் கட்டினால் கூட ரூ.82,119.34 ஆக இருக்கும். இது நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் தங்கத்தின் விலையை விட ரூ.5,360 குறைவு ஆகும்.
விமானங்களில் எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?
பாஸ்போர்ட் விதி 1964 படி இந்திய பயணி ஒருவர் 1 கிலோ தங்கம் வரை கோண்டு வர முடியும். இதில் குறிப்பிட்ட அளவு தங்கத்திற்கு வரிவிலக்கு உண்டு. ஆணாக இருந்தால் 20 கிராமும், பெண்ணாக இருந்தால் 40 கிராம் தங்கமும் கொண்டு வரலாம். அதாவது 1 லட்சத்திற்கு மேல் மதிப்பு போகக் கூடாது. இந்த அளவுக்கு தங்கம் கொண்டு வந்தால் வரி கிடையாது. ஆறு மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருந்து விட்டு நாடு திரும்பும் இந்தியர்கள் தங்கள் உடமைகளில் தங்கம் கொண்டு வர அனுமதி உண்டு. ஆனால், அதற்குட்பட்ட காலங்களில் அடிக்கடி சென்று வந்தால் பேக்கேஜ்களில் தங்கம் எடுத்து வர அனுமதி கிடையாது.
-
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications