Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாயை காலி செய்ய வரும் குட்டி நகரம்.. குவியும் முதலீடுகள்! வியந்து பார்க்கும் உலக நாடுகள்! அடடே செம

Subscribe to Oneindia Tamil

துபாய்: உலகின் முக்கிய நகரங்களாக ஐக்கிய அமீரக நகரங்கள் மாறி வரும் நிலையில், அங்குள்ள துபாய்க்குப் போட்டி தரும் விதமாக அதிரடி நடவடிக்கைகளில் இப்போது ஒரு குட்டி நகரம் இறங்கியுள்ளது.

சர்வதேச அளவில் முக்கிய நகரங்களில் ஒன்று துபாய்.. ஐக்கிய அமீரகத்தில் அமைந்துள்ள இந்த துபாய் நகருக்கு பல்வேறு உலக நாடுகளிடம் இருந்து முதலீடுகள் குவிந்து வருகிறது. நிலையான அரசு, மிகக் குறைந்த வரி உள்ளிட்டவை இதற்குக் காரணமாகும்.

 How the tiny Emirate Ras Al Khaimah planning to get mega inevestments

இதனால் சர்வதேச அளவில் பல நிறுவனங்களும் துபாயில் தங்கள் முதலீடுகளைக் குவித்து வருகிறது. அதேநேரம் இப்போது துபாய்க்குப் போட்டி கொடுக்கும் வகையில் சிறு நகரம் ஒன்று சர்வதேச முதலீடுகளை ஈர்க்க ரெடியாகி வருகிறது.

முதலீடுகள்: இந்த நகரம் இப்போது நம் கண் முன்னே மெல்ல மாறி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பாலைவனமாக மட்டுமே இருந்த இந்த நகரத்தில் இப்போது ஆடம்பர வில்லாக்கள் வர ஆரம்பித்துள்ளன. மேலும், இதே நகரின் மற்றொரு பகுதியில் அமெரிக்காவின் வைன் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனம் $3.9 பில்லியன் மதிப்பிலான கேமிங் ரிசார்ட்டை திட்டமிட்டு வருகிறது. இப்படிக் கடந்த சில காலங்களில் மட்டும் இந்த நகரில் பல டாப் நிறுவனங்களை முதலீடுகளை அள்ளி கொடுத்து வருகிறது.

உலகின் டாப் நகரங்களுக்குப் போட்டி தரும் வகையில் ரெடியாகும் இந்த நகரம் எங்கே இருக்கிறது எனக் கேட்கிறீர்களா.. இதுவும் ஐக்கிய அமீரகத்தில் தான் இருக்கிறது. அதுவும் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெறும் 45 நிமிட பயண தூரத்தில் இது அமைந்துள்ளது அங்கே வடக்குப் பகுதியால் அமைந்துள்ள ராஸ் அல் கைமா நகர் தான் சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்க்க போட்டிப் போட்டு வருகிறது. மலைச் சிகரங்களுக்குப் பெயர் போன ராஸ் அல் கைமா இப்போது சர்வதேச முதலீடுகளை ஈர்க்க ரெடியாகி வருகிறது.

செம பிளான்: பெரும் பணக்காரர்களை ஈர்க்கும் நடவடிக்கையில் இந்த நகரம் இப்போது இறங்கியுள்ளது. RAK என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நகரம் அமெரிக்காவின் மிச்சிகனில் படித்த ஷேக்கின் தலைமையின் வேற செலவில் ரெடியாகி வருகிறது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், தொழிலதிபர்கள், சாகச விரும்பிகள் என பல்வேறு தரப்பினரையும் ஈர்க்கும் ஒரு வகையிலான திட்டங்களுக்கு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. வைன் ரிசார்ட்ஸ் இவர்களுக்கு முதற்கட்ட பூஸ்டை கொடுத்தாலும் அடுத்தடுத்து பல முதலீடுகளை மேற்கொள்ளவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதிக செல்வந்தர்களை ஈர்க்கும் முயற்சியில் ஐக்கிய அமீரகம் ஈடுபட்டுள்ள நிலையில், இதன் மூலம் ராஸ் நகரமும் அதிக பயனடைய வாய்ப்புள்ளது. மேலும், டிஜிட்டல் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே உலகின் டாப் பணக்காரர்களை கஸ்டமர்களாக கொண்டிருக்கும் உல்லாச படகு நிறுவனம் ஒன்றும் தனது உற்பத்தி மையத்தை இங்கே அமைக்கத் திட்டமிட்டுள்ளதாம். இந்த நகரம் அடுத்து எந்த மாதிரியான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

7 நகரங்கள்: ஐக்கிய அமீரகம் என்பது மொத்தம் 7 அமீரகங்களைக் கொண்டதாகும். இதில் அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகியவை சர்வதேச அளவில் முதலீட்டு மையங்களாக இருக்கிறது. அதேநேரம் அஜ்மான், புஜைரா, உம் அல் குவைன், ராஸ் அல் கைமா ஆகிய நகரங்களும் உள்ளன. இந்த ராஸ் அல் கைமா நகரம் தான் இப்போது பிரம்மாண்ட முதலீடுகளை ஈர்க்க மெகா திட்டங்களை வகுத்து வருகிறது.

இந்த ராஸ் அல் கைமா தான் ஏழு அமீரகங்களில் மிகச் சிறியதாகும். மற்ற அமீரக நகரங்களைப் போல இல்லாமல் ராஸுக்கு அருகே அழகிய மலைத் தொடர்களும் இருக்கிறது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்க முடியும்.

இருப்பினும், பிளான் செய்தது போலவே அனைத்து முதலீடுகளும் வரும் என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் இதிலும் பல தடைகள் இருக்கவே செய்கிறது. அதையெல்லாம் இவர்கள் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்தே பார்க்க வேண்டும்.

சர்வதேச சுற்றுலாப் பயணிகள்: கடந்தாண்டு மட்டும் அமீரகத்திற்கு 11 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். ஒரே ஆண்டில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மட்டும் 40% அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து தான் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். கஜகஸ்தான் மற்றும் இங்கிலாந்தில் இருந்தும் கணிசமான அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இதற்கிடையே சீனா சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியிலும் ஐக்கிய அமீரகம் இறங்கியுள்ளது.

வரும் காலத்தில் சீன சுற்றுலா பயணிகள் ஐக்கிய அமீரகத்திற்கு அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களை கவரும் முயற்சியில் ராஸ் நகரம் இறங்கியுள்ளது. கேமிங் ரிசார்ட், சொகுசு விடுதிகள் ஆகியவற்றை உருவாக்கி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சியில் ராஸ் நகரம் ஈடுபட்டுள்ளது.. திட்டமிட்டது போலவே அங்கு அனைத்தும் நடந்தால் ஐக்கிய அமீரகத்தின் மற்றொரு துபாய் நகராக இந்த ராஸ் அல் கைமா நகரம் மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+