அவர் மட்டும் ஸ்பெஷலா.. வெடித்த சர்ச்சை.. நியூசிலாந்துடனான போட்டியில் இந்திய அணியில் யாருக்கு இடம்?
துபாய்: நியூசிலாந்துக்கு எதிரான நாளைய 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் இந்திய பிளேயிங் 11 அணியை தேர்வு செய்வதில் கேப்டன் விராட் கோலிக்கு 5 முக்கியமான பிரச்சினைகள் உள்ளன.
Recommended Video
உலககோப்பை குரூப் பி பிரிவில் இருந்து, பாகிஸ்தான் அரையிறுதிக்கு போவது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. அடுத்த அணி இந்தியாவா அல்லது நியூசிலாந்தா என்பதை தீர்மானிப்பதில் நாளைய போட்டி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாளைய போட்டியில் வெல்லும் அணி அதன் பிறகு, நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றை வெல்வது ஒப்பீட்டளவில் சற்று எளிதான விஷயம் என்பதால் நாளைய போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்ற பிரச்சினை இருக்கக்கூடிய போட்டியாகும்.

உடல் தகுதி
இந்த நிலையில்தான், அணி தேர்வில், கேப்டன் விராட் கோலிக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி தற்போது இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. அவர் பந்து வீசுவாரா இல்லையா? சரியான உடல் தகுதி இல்லையா? ஒரு ஆல்-ரவுண்டராக ஆடுவாரா அல்லது பேட்ஸ்மேன் மட்டுமேவா? என்பது பற்றி பல கேள்விகளுக்கு விராட் கோலி விடை காண வேண்டும். இதற்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் வழிகாட்டியான எம்எஸ் தோனி ஆகியோர் அவருக்கு உதவுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஹர்திக் பாண்ட்யா
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடினார். ஆனால் விளையாடும்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். இருப்பினும், சாஸ்திரி, தோனி மற்றும் கோலியின் மேற்பார்வையில், அவர் வலை பயிற்சிகளில் பந்துவீசி வருகிறார். பாண்டியாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு எதிராக குரல்கள் வலுத்து வருகின்றன.
ஏன் இவ்வளவு ஸ்பெஷல் என்ற கேள்விகள் எழுகின்றன. பாண்டியாவை பிளேயிங் 11ல் அணி நிர்வாகம் வைத்திருப்பதன் நோக்கம் பல முன்னாள் தேர்வாளர்களுக்கு புரியவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தேர்வாளருமான சந்தீப் பாட்டீல், 'போட்டியின் போது அவர் ஃபிட் ஆகவில்லை என்றால், அவர் எப்படி ஃபிட்டாக இருக்கிறார் என்று சொல்ல முடியும்? இது ஒரு உலகக் கோப்பை தொடர் என்பதை நினைவில் வைத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஹர்திக் இல்லையென்றால் விராட் யாருக்கு வாய்ப்பு தருவார்?
4 ஓவர்களை முழுமையாக வீசும் நிலையில் பாண்டியா இருப்பதாகத் தெரியவில்லை. அவரை வெளியே வைக்க நிர்வாகம் முடிவு செய்தால் யாரை சேர்ப்பது என கேள்விகள் எழும். உதாரணமாக, ஷர்துல் தாக்கூர் அல்லது வெங்கடேஷ் ஐயர் போன்ற ஆல்-ரவுண்டர்கள் சிறப்பாக பந்துவீச முடியும். ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு பேட்ஸ்மேனாக பாண்ட்யாவை விட சிறப்பாக ஆட முடியும். ஆனால் பந்துவீசவும் ஆள் வேண்டும். இந்த பேலன்ஸ்தான் விராட் மற்றும் அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர்
ஹர்திக் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷான் கிஷான் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரை சேர்க்குமாறு மூத்த கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பரிந்துரைத்துள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை மற்றும் இஷான் கிஷான் சிறந்த பார்மில் இருப்பதால், அவரை பாண்டியாவை விட நான் நிச்சயமாக சிறந்த வீரராக கருத்தில் கொள்வேன் என்று ஒரு சேனலுடனான உரையாடலில் கவாஸ்கர் கூறினார். ஒருவேளை, புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூரை சேர்த்தாலும் நல்லது என்ற நிலைதான் உள்ளது.

ஹர்திக்கிற்கு பதிலாக ஷர்துல் அல்லது ஸ்ரேயாஸ் ஏன் இல்லை?
மும்பையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய தலைமை தேர்வாளருமான சலில் அன்கோலா கூறுகையில், "பாண்டியா பந்துவீசவில்லை என்றால், அவர் எந்த வகையிலும் அணியில் இருக்க தேவையில்லை. நான் மும்பையைச் சேர்ந்தவன் என்பதால் இதைச் சொல்லவில்லை ஆனால் கொஞ்சம் கிரிக்கெட்டைப் புரிந்து கொண்டவர்கள் கூட இந்த நேரத்தில் பாண்டியாவுக்குப் பதிலாக ஷர்துல் தாக்குரைதான், தேர்ந்தெடுப்பார்கள். ஷர்துல் இன்னும், தன்னை எவ்வளவு நிரூபிக்க வேண்டும்? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். 6வது இடத்தில் ஒரு ஆல்ரவுண்டர் வேண்டும் என்றால், ஷர்துல் சரியானவர். இந்த நேரத்தில் அவர் உலகின் எந்த அணியிலும் இடம் பெற முடியும். ஸ்ரேயாஸ் ஐயரும் தன்னை நிரூபித்து விட்டார், அந்த இடத்தில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் வேண்டுமென்றால் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதை விடுத்து ஏன் பாண்ட்யாதான் வேண்டும் என நினைக்கிறீர்கள் என்கிறார் சலில் அன்கோலா.

ராகுல் சாஹர் அல்லது வருண் சக்கரவர்த்தி
டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாகத் திணறினர். பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஐந்து முன்னணி பந்துவீச்சாளர்களுக்கும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தும் வாய்ப்பை தரவில்லை. மிஸ்ட்ரி சுழற்பந்து வீச்சாளர் என்று வருண் சக்ரவர்த்தியை அழைத்து வந்தார்கள். ஆனால் அவர், 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மாறாக, ரவீந்திர ஜடேஜா தனது 4 ஓவர்களில் 28 ரன்கள்தான் கொடுத்தார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு குறித்தும் ஒரு பெரிய கேள்வி எழும். துபாயில்தான் நாளைய போட்டியும் நடைபெறுகிறது. அங்கு நடந்த போட்டிகளில் 160 என்ற ஒரு ஸ்கோரை கூட இதுவரை எந்த அணியும், தாண்டவில்லை. குறைந்த ஸ்கோரிங் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானது. முதல் போட்டியில் ராகுல் சாஹருக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஐபிஎல்லில் சஹர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே வருண் சக்கரவர்த்தியா அல்லது ராகுல் சஹர் ஆகிய இருவரில் எந்த சுழற்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிப்பது, அல்லது அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கலாமா என்ற பிரச்சினையும் அணி முன்பாக இருக்கிறது.
-
துபாய் போட்ட திடீர் உத்தரவு.. இந்தியர்களுக்கு தான் மோசமான பாதிப்பு.. இன்னும் 10 நாளே தானே இருக்கு! -
இந்தியாவை நம்ப வைத்து ஏமாற்றிய பிரான்ஸ்.. ரஃபேல் விமானங்கள் வேஸ்ட்! மொத்தமா போச்சு! -
மத்திய அரசின்.. ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் கார்டு இருக்கா? குட்நியூஸ் வந்துடுச்சு! -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்! -
போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ் -
இலக்கியம் முதல் விண்வெளி வரை: டேராடூனில் களைகட்டும் டூன் இலக்கியத் திருவிழா 2026! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications