பிரஷர்.. பிரஷர்.. அந்த நொடியில் மொத்தமாக கைவிட்டு போன ஆட்டம்.. இந்தியா தோல்வி அடைந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

துபாய்: நியூசிலாந்துக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்து உள்ளது. இந்திய அணி மிக மோசமாக பேட்டிங் செய்து தோல்வி அடைந்தது.

இன்று இந்திய அணி டாஸ் தோல்வி அடைந்ததும் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. டாஸ் தோல்வி அடைந்த இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்கியது.இந்திய அணிக்குள் இன்று சூர்ய குமார் யாதவ் ஆடவில்லை. காயம் காரணமாக அவர் ஆடவில்லை.

மாறாக இஷான் கிஷான் களமிறங்கினார். அதேபோல் புவனேஷ்வர் குமார் இன்று அணியில் இருந்து நீக்கப்பட்டார். மாறாக அணிக்குள் இன்று ஷரத்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார்.

மோசமான தொடக்கம்

மோசமான தொடக்கம்

முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி ஒப்பனர்கள் கிஷான், ராகுல் இருவரும் மோசமாக தொடக்கம் கொடுத்தனர். அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்பதற்காக சுற்றி சுற்றி அடித்து விக்கெட் கொடுத்தனர். பெரும்பாலும் சிக்ஸ் அடிக்க முயன்று முடியாமல் போய் அவுட்டான வீரர்கள்தான் அதிகம். கிஷான் (4) முதலில் கேட்ச் கொடுத்து அவுட்டானர்.

சொதப்பல் பேட்டிங்

சொதப்பல் பேட்டிங்

அதன்பின் ராகுல் (18) கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் ரோஹித், கோலி நன்றாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித் 14 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்தார். கோலியும் 9 ரன்கள் எடுத்து தேவையின்றி ஷாட் ஆடி அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய பண்ட், பாண்டியாதான் மிக மோசமான ஆட்டம் ஆடினார்கள்.

போராடவே இல்லை

போராடவே இல்லை

5.1 வது ஓவரில் இந்திய அணி கடைசியாக பவுண்டரி அடித்தது. அதன்பின் மீண்டும் பவுண்டரி அடிக்க இந்திய அணி 72 பந்துகள் எடுத்துக்கொண்டது. ஆம் அந்த அளவிற்கு மோசமாக இந்தியாவின் ஆட்டம் இருந்தது. இந்திய வீரர்கள் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடியது. என்ன திட்டத்தோடு ஸ்லோ இன்னிங்ஸ் ஆடினார்கள் என்ற கேள்வி இருந்தது.

72 பந்துகள்

72 பந்துகள்

அந்த 72 பந்துகளில்தான் ஆட்டம் மாறியது. அந்த 72 பந்துகளில் மொத்தமாக ஆட்டம் இந்தியாவின் கையைவிட்டு சென்று நியூசிலாந்து அணிக்கு சென்றது. மிக முக்கியமாக மேட்ச் பார்த்துக்கொண்டு இருந்த பலர் பாதியில் மூடி வைத்துவிட்டு படையப்பா படம் பார்க்க சென்றனர்.எப்போதும் ஸ்பின் பவுலர்கள் பந்தில் இந்திய வீரர்கள் நந்தடராக் ஆடுவார்கள்.

தோல்வி

தோல்வி

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 110/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பின் இறங்கிய நியூசிலாந்து அணி டென்சன் இல்லாமல் நிம்மதியாக ஆடியது. இந்திய அணிக்கு இன்று டிபன்ட் செய்ய ஸ்கோர் இல்லை. பும்ரா மட்டுமே நன்றாக பவுலிங் செய்து 2 விக்கெட் எடுத்தார். மற்றபடி இந்திய அணி என்ன பவுலிங் செய்தாலும் இந்த ஸ்கோரை டிபன்ட் செய்ய முடியாது.

மோசம்

மோசம்

நியூசிலாந்து அணி எளிதாக 14.3 ஓவரில் 111-2 ரன்கள் எடுத்து வென்றது. இதனால் இந்திய அணிக்கு செமி பைனல் செல்லும் வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோய் உள்ளது. இனி மற்ற அணிகள் மோசமாக ஆடி தோல்வி அடைய வேண்டும் என்று இந்திய அணி வேண்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+