தோனி களமிறக்கும் கேம் சேஞ்சர்.. பாண்டியாவை விடுங்க.. வேறு ஒரு வீரருக்கு டாட்டா காட்டிய இந்திய அணி?!
துபாய்: நியூசிலாந்துக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை போட்டியில் இன்று இந்திய அணி ஆட உள்ள நிலையில் அணியில் முக்கியமான மாற்றம் ஒன்று செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான டி 20 உலகக் கோப்பை ஆட்டம் இன்று நடக்க உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி மோசமாக ஆடி தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் பேட்டிங் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் அந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் மோசமாக இருந்தது. ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்திய பவுலர்கள் மோசமாக சொதப்பினார்கள்.

முக்கியம்
இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் இந்தியாவிற்கு வாழ்வா சாவா ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் பெரும்பாலும் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் இன்றைய போட்டியில் இந்தியா வெற்றிப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

பாண்டியா
இந்திய அணியில் இந்த போட்டிக்காக பாண்டியா மாற்றப்படுவாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா கடந்த 3 நாட்களாக தீவிரமாக பவுலிங் பயிற்சி செய்தார். இவரின் பவுலிங் மிக சிறப்பாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியில் இன்றைய போட்டியில் இவர் இரண்டு ஓவர்கள் வரை வீசும் வாய்ப்புகள் உள்ளன. எனவே பாண்டியா நீக்கப்பட வாய்ப்பு இல்லை.

மாற்றம்
இந்த நிலையில்தான் அணியில் கூடுதல் பாஸ்ட் பவுலர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதன்படி புவனேஷ்வர் குமார் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். இவர் முழு பாஸ்ட் பவுலர். ஸ்விங் பவுலிங் செய்வார் என்று அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் கடந்த போட்டியில் இவர் ஸ்விங் பவுலிங்கும் சரியாக செய்யவில்லை. அதேபோல் டெத் ஓவர்களிலும் சரியாக பவுலிங் செய்யவில்லை.

நீக்கம்
இதனால் இந்திய அணிக்குள் விக்கெட் டேக்கரான ஷரத்துல் தாக்கூர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷரத்துல் தாக்கூர் கொஞ்சம் ரன் கொடுத்தாலும் நன்றாக விக்கெட் எடுப்பார். அணியில் முக்கியமான நேரத்தில் விக்கெட் எடுத்து ஆட்டத்தை மாற்றும் கேம் சேஞ்சர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் ரன் கொடுத்தாலும் 2-3 விக்கெட்டுகளை எளிதாக எடுக்கும் திறன் கொண்டவர் இவர்.

அணிக்குள் வருகிறார்
இதனால் புவனேஷ்குமாருக்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் அணிக்குள் வர உள்ளதாக கூறப்படுகிறது. 16 பேர் கொண்ட அணிக்குள் ஷரத்துல் தாக்கூரை கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் தோனிதான். சிஎஸ்கே அணியில் தோனியின் துருப்பு சீட்டாக இவர் இருந்தார். இதனால் இந்திய அணியிலும் மென்டர் தோனியின் சிபாரிசின் பெயரில் ஷரத்துல் தாக்கூர் களமிறங்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

கோலி என்ன சொன்னார்
ஷரத்துல் தாக்கூர் வரும் பட்சத்தில் பேட்டிங்கிலும் இந்தியாவிற்கு ஒருவர் கூடுதலாக கிடைப்பார். இதை பற்றி கோலியும் சூசகமாக கருத்து தெரிவித்து இருந்தார். அதில், ஷரத்துல் தாக்கூர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். அவர் கண்டிப்பாக எங்களின் திட்டத்தில் இருக்கிறார். அவர் அணிக்கு பெரிய வேல்யூ கொண்டு வருவார், என்று ஷரத்துல் தாக்கூரை கோலி பாராட்டி இருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications