"இது மட்டும் நடந்தா இந்திய அணிக்கு சிக்கல்".. பாக். பிளானை கையில் எடுத்த நியூசி வீரர்.. விளாசிய கோலி
துபாய்: இந்திய அணிக்கு எதிராக இன்று நியூசிலாந்து அணி உலகக் கோப்பை டி 20 போட்டியில் ஆட உள்ள நிலையில் கேப்டன் கோலி நியூசிலாந்து வீரர் ஒருவருக்கு முக்கியமான சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
இந்தியா நியூசிலாந்து அணிகள் ஆடும் மிக முக்கியமான உலகக் கோப்பை டி 20 லீக் ஆட்டம் இன்று நடக்க உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இன்று நடக்கும் போட்டி வாழ்வா சாவா போட்டியாக இருக்கப் போகிறது.
நியூசிலாந்து, இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் பாகிஸ்தானோடு நடந்த போட்டியில் தோல்வி அடைந்துவிட்டது. இதனால் இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக இருக்கும். கிட்டத்தட்ட இது ஒரு நாக் அவுட் சுற்று போலவே இருக்கும்.

எப்படி
இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் திணறியது. ஸ்விங் பந்துகளை, யார்க்கர் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. முக்கியமாக ஷகின் ஷா வீசிய துல்லியமான யார்க்கர், ஸ்விங் பந்துகளை வீரர்கள் எதிர்கொள்ள முடியாமல் கடுமையாக திணறினார்கள். இந்தியாவின் டாப் ஆர்டர் சரிய இதுவே காரணம்.

டாப் ஆர்டர்
இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோருமே ஸ்விங் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்கள். அதோடு 152 கிமீ வேகத்தில் பந்து சட்டென ஸ்விங் ஆனதால் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் நல்ல பேட்டிங் லைன் அப் இருந்தும் கூட இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணியும் இதே போல பவுலிங் செய்யும் திட்டத்தில் இருக்கிறது.

பவுலிங்
இந்தியாவிற்கு எதிராக அதிக வேகத்தில் ஸ்விங் செய்யும் திட்டத்தில் நியூசிலாந்து அணி வீரர்கள் இருக்கிறார்கள். நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்டும் இதே விஷயத்தை குறிப்பிட்டு உள்ளார். அதாவது ஷகின் ஷா போல பவுலிங் செய்வேன் என்று ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார். டிரெண்ட் போல்ட் அளித்த பேட்டியில், ஷகின் ஷா சிறப்பாக பவுலிங் செய்தார். அவரின் பவுலிங் நன்றாக ஸ்விங் ஆனது.

ஸ்விங்
அவர் பிட்சை பயன்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. அவரை போல பவுலிங் செய்தால் விக்கெட் எடுக்க முடியும். இந்தியாவிற்கு எதிராக எங்களுடைய பிளானும் ஸ்விங் ஆகவே இருக்கும். அவரை போல பந்தை ஸ்விங் செய்யும் பட்சத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வேகமாக எடுக்க முடியும், என்று ஷகின் ஷா குறித்து டிரெண்ட் போல்ட் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் செய்தால் அது அணிக்கு சிக்கலாக முடியும்.

பதில்
இதற்கு கோலி அளித்துள்ள பதிலில், டிரெண்ட் போல்ட் ஷகின் ஷா போல பந்து வீச முயற்சி செய்கிறார் என்றால் செய்யட்டும். அவருக்கு அப்படி பவுலிங் செய்ய முழு உரிமை உள்ளது. நாங்கள் அதற்கு உரிய கவுண்டர் அட்டாக் கொடுப்போம். பவுலர்களுக்கு பிரஷர் கொடுப்போம். அவருக்கு மட்டுமின்றி அனைத்து நியூசிலாந்து பவுலர்களுக்கும் அழுத்தம் கொடுப்போம், என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications