Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயிச்சேயாகனும்.. பலம் வாய்ந்த ஆப்கானிஸ்தானுடன் இந்தியா நாளை மோதல்.. அணிக்குள் வருகிறார் 'சீனியர்?'

Subscribe to Oneindia Tamil

துபாய்: இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக படுதோல்வி அடைந்த நிலையில் இந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் பலம்வாய்ந்த ஆப்கானிஸ்தான் அணியுடன் நாளை மோத உள்ளது.

இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தால் உடனடியாக இந்தியா திரும்புவதற்கு விமான டிக்கெட்டுகளை புக் செய்து விடலாம் என்ற அளவுக்கு மிக மிக முக்கியமான போட்டி இதுவாகும்.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்தபோதிலும், இந்திய அணியின் அரைஇறுதி கனவு ஏறத்தாழ நொறுங்கி விட்டது. ஆனாலும் ஆப்கானிஸ்தான் அணியுடன் நாம் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து போன்ற அணிகளுடன் மோசமாக தோல்வி அடைந்தால் இந்திய அணி அரையிறுதிக்கு போக வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவுக்கு வாய்ப்பு என்ன

இந்தியாவுக்கு வாய்ப்பு என்ன

இந்தியாவும், நமீபியா, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளுடன் நல்ல ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இது நிச்சயமாக நடக்கும். நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோசமாக தோற்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் ஒரு பக்கம் வேண்டிக்கொண்டு இருந்தாலும் கூட, சில ரசிகர்களோ, இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் தோற்று விடக் கூடாது என்ற பதட்டத்தில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கன் இதுவரை மோதிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அபாரம்

ஆப்கானிஸ்தான் அபாரம்

குரூப் 2 அணிகளில் அதிக ரன் ரேட் எடுத்து வைத்துள்ள அணி ஆப்கானிஸ்தான்தான். +3.097 என்ற அளவுக்கு ஆப்கானிஸ்தானின் நெட் ரன் ரேட் உள்ளது. ஆப்கன் அணி பாகிஸ்தானுடன் மட்டும்தான் தோல்வியை சந்தித்தது. அதுவும் கூட கடுமையான போராட்டத்திற்குப் பிறகுதான் பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற முடிந்தது. ஆனால் இந்தியா மோதிய 2 போட்டிகளிலும் ஈஸியாக தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணி ரன் ரேட் மைனஸ் 1.609 என்ற அளவில் மோசமாக இருக்கிறது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிளேயிங் 11 டீமில் கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    Yuvraj Singh Makes Comeback Announcement; fans go crazy | OneIndia Tamil
    வருண் சக்கரவர்த்தி

    வருண் சக்கரவர்த்தி

    மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி முதல் இரு போட்டிகளிலும் விக்கெட் எதையும் எடுக்கவில்லை. அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் பெயர் பெற்றவர் என்பதால் இந்த போட்டிக்கு அழைத்து வரப்படுவார் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவரை இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டும்தான் வீழ்த்தியுள்ளது. அந்த அளவுக்கு பந்துவீச்சாளர்கள் மோசமாக ஆடி வருகின்றனர்.

    அஸ்வின் வருகை

    அஸ்வின் வருகை

    எனவே அஸ்வின் அணிக்குள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ஆங்கில ஊடகங்கள் பலவும் செய்திகள் வெளியிட்டுள்ளன. நாளைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை விடவும் இந்திய அணிக்கு தான் மிகுந்த நெருக்கடி உள்ளது. ரஷித் கான், முகமது நபி உள்ளிட்ட மிகச்சிறந்த ஸ்பின்னர்கள் கொண்ட அணி ஆப்கானிஸ்தான் என்பதால் அதை வீழ்த்த வேண்டுமென்றால் 200 சதவீதம் அதிக திறமையோடு இந்திய அணி ஆட வேண்டி இருக்கும். நாளையாவது விடிவுகாலம் பிறக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+