Lottery: வாங்கிய முதல் லாட்டரிக்கே விழுந்த ரூ.12 கோடி! துள்ளி குதித்த முருகானந்தம்.. அதிர்ஷ்டம்னா இதுதான்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வரும் இந்தியாவை சேர்ந்த முருகானந்த் கோவிந்தன் என்பவருக்கு லாட்டரியில் ரூ.12.3 கோடி பரிசாக அடித்துள்ளது. முதல் முறையாக லாட்டரி வாங்கியவருக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பரிசு மழை கொட்டியுள்ளது.

கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பது போல, முதல் முறை வாங்கிய டிக்கெட்டிற்கே பரிசு அடித்ததால் மகிழ்ச்சி அடைந்த முருகானந்தம் கோவிந்தன். இந்த பரிசால் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நனவாகும் என்று கூறியுள்ளார்.

Indian Expat Wins Rs 12 3 Crore Lottery in Dubai on First Attempt

இந்தியருக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்

லாட்டரியில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரியாது. சிலருக்கு வருடக்கணக்கில் டிக்கெட் வாங்கி ஒரு ரூபாய் கூட கிடைக்காமல் போகும். ஆனால் சிலருக்கோ வாங்கிய முதல் டிக்கெட்டிற்கே பல கோடி அடித்து கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வாழ்க்கையில் திருப்புமுனையை கொடுக்கும்.

கேரளாவில் கடந்த ஓணம் பம்பரில் கூட அப்படித்தான். பெயிண்ட் கடை ஊழியர் ஒருவர் வாங்கிய முதல் பம்பர் லாட்டரியிலேயே ரூ.25 கோடி பரிசு அடித்தது. இதேபோன்ற ஒரு நிகழ்வுதான் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியருக்கு நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

சொந்தமாக வீடு கூட இல்லை

இந்தியாவை சேர்ந்தவர் முருகானந்த் கோவிந்தன். 41 வயதான இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். இந்தியாவில் உள்ள தனது சொந்த ஊரில் சொந்தமாக வீடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் முருகானந்தம் கோவிந்தன். ஐக்கிய அரபு அமீரகத்தில் கஷ்டப்பட்டு சம்பாதித்து வருகிறார்.

கடந்த 3 ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் முருகானந்தம் யூஏஇயில் விற்கப்படும் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். இந்த டிக்கெட்டிற்கு 5 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.12.3 கோடி) பரிசாக விழுந்துள்ளது. இதனால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த முருகானந்தம் இது லாட்டரி பரிசு பற்றி கூறியதாவது:-

இப்படி ஒரு திருப்பம் ஏற்படும் என நினைக்கல

நான் மூன்று ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறேன். எனது குழந்தைகளின் கல்வி செலவு என அனைத்து பொறுப்புகளும் என் தோள் மீதுதான் உள்ளது. அதன் காரணமாகவே நான் ஐக்கிய அரபு அமீரகம் வந்தேன். இவ்வளவு விரைவாக இப்படி ஒரு திருப்பம் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.

நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். நாங்கள் இன்னும் வாடகை வீட்டில்தான் உள்ளோம். சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது எனது கனவு. இதற்கு முன்பு எனக்கு அதை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது அந்த பிரச்சனைகளை தீர்க்கும் வழி எனக்கு கிடைத்துள்ளது. எனக்கு இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் அளித்த மிகப்பெரிய ஆசிர்வாதமாகே இதை பார்க்கிறேன்" என்றார்.

தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம்

260214 என்ற அதிர்ஷ்ட எண்ணிற்குதான் 12 கோடி ரூபாய் பரிசாக அடித்துள்ளது. முருகானந்த்திற்கு அடித்தது இரண்டாவது பரிசாகும். முதல் பரிசான 30 மில்லியன் இதுவரை உரிமை கோரப்படவில்லை. முருகானந்தம் கோவிந்தன் தனது நண்பருடன் சேர்ந்து இந்த டிக்கெட்டை வாங்கியதால் அவருடன் பரிசை பகிர்ந்து கொள்ள உள்ளார்.

முருகானந்தம் கோவிந்தன் இந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+