நடுவானில் தவித்த 180 பயணிகள்! உயிரை பணயம் வைத்து.. இந்திய கேப்டன் செய்த செயல்!
துபாய்: துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கி சென்ற ஃபிளை துபாய் விமானத்தில், பயங்கரவாத தாக்குதல் முயற்சியை முறியடித்து 180 பயணிகளின் உயிரை இந்திய விமானி ஸ்மித் மச்சார் காப்பாற்றியிருக்கிறார்.
இந்திய விமானியின் செயல் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் அவர் காட்டிய துணிச்சல் ஒரு மாபெரும் பேரழிவை தடுத்துள்ளது.

யார் இந்த கேப்டன்?
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான இவருக்கு 13 ஆண்டுகளுக்கும் மேலாக வணிகரீதியான விமானங்களை இயக்கிய அனுபவம் உள்ளது. முன்பு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், 2022ல் ஃபிளை துபாய் நிறுவனத்தில் கேப்டனாக இணைந்தார். விமானத்தின் இணை விமானியான ஓமன் நட்டை சேர்ந்த நபர்.. கொஞ்ச தூரம் வரை நார்மலாகதான் வந்தார். ஆனால், நடுவானத்தில்.. விமானம் சுமார் 40,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்தபோது திடீரென, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்மித்தை குத்திவிட்டார்.
அந்த இணை விமானியின் நோக்கம், விமானத்தை கடத்தி தரைமட்டமாக்க அல்லது, எங்காவது மோதி அழிப்பதுதான். இதற்காகவே அவர் திடீரென முக்கிய விமானியான கேப்டன் ஸ்மித்தை கத்தியால் குத்தியிருக்கிறார்.
The pilot who was stabbed on FlyDubai flight 1073 has been identified as Captain Smit Machchhar, an Indian national based in Dubai, reports @ariel_oseran.
— Israel War Room (@IsraelWarRoom) September 30, 2026
We are praying for Captain Machchhar’s recovery🙏 pic.twitter.com/Unw0yO6Z7l
கத்தி குத்துப்பட்டு பலத்த காயமடைந்த நிலையிலும், கேப்டன் ஸ்மித் அந்த பயங்கரவாதியுடன் ஆக்ரோஷமாக போராடி, விமானத்தை அவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமல் தடுத்துள்ளார். காக்பிட்டிற்குள் சத்தம் கேட்டு ஓடிவந்த இஸ்ரேலிய பயணிகள் சில், அந்த பயங்கரவாதியை மடக்கி பிடித்தனர்.
விமானத்தில் பயணித்த இஸ்ரேலிய பல் மருத்துவர் ஒருவர், கடுமையான இரத்தப்போக்கோடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கேப்டன் ஸ்மித்துக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றினார். அதன் பின் அதே விமானத்தில் பயணிகளாக பயணித்துக்கொண்டிருந்த மாற்று ஆஃப் டியூட்டி விமானிகள் விமானத்தின் கட்டுப்பாட்டை எடுத்து சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினர்.
படுகாயமடைந்த இந்திய கேப்டன் ஸ்மித் மற்றும் தாக்குதல் நடத்திய ஓமன் நாட்டு இணை விமானி ஆகிய இருவரும் தற்போது சவுதியின் தபூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
