ஒரு முறை இல்லை.. இரண்டு முறை மரணத்தை வென்ற இந்திய விமானி ஸ்மித்.. மருத்துவர்கள் ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: நடுவானில் ஓமன் நாட்டை விமானியால் கோடாரியால் பலமுறை தாக்கப்பட்டு உயிர் தப்பிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார், மரணத்தின் விளிம்புக்கு சென்று திரும்பியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவரது தலையில் உள்ள பெரிய அறுவை சிகிச்சை தழும்புகளையும் ஸ்டேபிள்களையும் பார்த்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அவருக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தை விளக்கியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற ஃப்ளைடுபாய் விமானத்தை கடத்தும் முயற்சி நடைபெற்றது. ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானியே இந்த கடத்தல் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இருப்பினும், இந்திய விமானியின் துணிச்சலான செயலால் அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

Indian Pilot Smith Machchhar Smith Machchhar Survived

பாராட்டு

இதற்கிடையே அவரது துணிச்சலை பாராட்டும் வகையில் கடந்த அக்டோபர் 27ம் தேதி அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஸ்மித் மச்சார் மற்றும் அவரது விமான குழுவினருக்கு சயீத் II விருதை வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் மிக பெரிய விவாதமாகவே மாறியுள்ளது. அவரது காயத்தின் தீவிரம் குறித்த மருத்துவர்கள் பல்வேறு கருத்துளை கூறி வருகிறார்கள்.

மண்டை ஓடு

கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு மண்டை ஓட்டின் பின்புறத்தில் எலுவும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காகவே பெரிய அளவில் மண்டை ஓட்டு பகுதியை திறந்து அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளதாகவும் அமெரிக்காவை சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சனத் தீட்சித் தெரிவித்தார். ஸ்மித் மச்சாரின் மண்டை ஓட்டு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு மிக அருகில், மூளையிலிருந்து ரத்தத்தை வெளியேற்றும் முக்கிய ரத்த நாளமான Superior Sagittal Sinus இருப்பதாக டாக்டர் தீட்சித் விளக்கியுள்ளார். அந்த ரத்த நாளம் பாதிக்கப்படும்போது கடுமையான ரத்தப்போக்கு ஏற்படுவதுடன், மூளையிலிருந்து ரத்தம் வெளியேறும் செயல்பாடும் பாதிக்கப்படலாம்.

ரத்தப்போக்கு

இது போன்ற முக்கிய ரத்த நாளத்தில் காயம் ஏற்பட்டால், உயிரிழப்பு அல்லது நிரந்தர பாதிப்பு ஏற்படும் அபாயம் 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்மித்தை பொறுத்தவரை உடைந்த மண்டை ஓட்டுத் துண்டு, காயமடைந்த ரத்த நாளத்தின் மீது அழுத்தம் கொடுத்து ரத்தப்போக்கைத் தற்காலிகமாக கட்டுப்படுத்தியிருக்கலாம். அறுவை சிகிச்சையின்போது அந்த எலும்புத் துண்டை மருத்துவர்கள் அகற்றும்போது, ரத்த நாளம் திறந்து மிக அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர் தீட்சித் எச்சரித்துள்ளார். அப்படிப்பட்ட சூழலில் ஒரு நிமிடத்தில் இரண்டு லிட்டர் ரத்தம் வரை வெளியேறக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது Superior Sagittal Sinusல் ஸ்மித்திற்கு காயம் ஏற்பட்டிருக்கலாம். இந்த நரம்பில் காயம் ஏற்பட்டால் ரத்தம் அதிவேகமாக வெளியேறும். இருப்பினும், அவரது மண்டை ஓட்டு துண்டு, காயமடைந்த இந்த ரத்த நாளத்தின் மீது பிரஷர் போட்டு ரத்த போக்கை தடுத்திருக்கலாம் என மருத்துவர் சனத் தீட்சித் கூறுகிறார்.

வீக்கம்

ஸ்மித் மச்சாரின் தலையில் தெரியும் பெரிய குறுக்குவெட்டு தழும்பு என்பது கடுமையான மூளை காயத்தையும் இரண்டு முக்கிய அறுவை சிகிச்சைகளையும் சுட்டிக்காட்டுவதாக ஆஸ்திரேலியாவின் சிட்னியை சேர்ந்த டாக்டர் சோனு பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "மூளையில் ஏற்பட்ட வீக்கத்தை குறைப்பதற்காக மண்டை ஓட்டின் ஒரு பெரிய பகுதி தற்காலிகமாக அகற்றப்பட்டிருக்கலாம். இதை Decompressive Craniectomy என்போம்.

பின்னர் வீக்கம் குறைந்த பிறகு மண்டை ஓட்டின் எலும்பு பகுதியை மீண்டும் பொருத்துவதற்காக மற்றொரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கலாம். போட்டோக்களை வைத்து பார்த்தால் அப்படி தான் தெரிகிறது" என்றார்.

மண்டை ஓட்டின் உடைந்த பகுதி மூளையை நோக்கி அழுந்தியிருப்பது மிகவும் தீவிரமான காயத்தையே ஏற்படுத்துமாம். இதுபோன்ற சூழல்களில் அறுவை சிகிச்சையின்போது எலும்பு துண்டுகளை கவனமாக அகற்றி, மூளையை பாதுகாக்கும் சவ்வை பரிசோதித்து, காயத்தை சுத்தம் செய்து சேதமடைந்த பகுதிகளை சரிசெய்ய வேண்டும். இந்தளவுக்கு சிக்கலான ஆபரேஷன்களை தான் மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

இரண்டு முறை தப்பியிருக்கிறார்

செப்டம்பர் 30-ம் தேதி துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற ஃப்ளைடுபாய் விமானத்தில் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய ஸ்மித், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையில் இருந்தும் உயிர் தப்பி இருக்கிறார். இப்படி ஒரு முறை இல்லை இரண்டு முறை அவர் உயிர் தப்பி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+