துபாயில் பர்சை தொலைத்த இந்திய சுற்றுலாப் பயணி.. ஒரு மணி நேரத்தில் நடந்த சம்பவம்.. தலையே சுற்றிபோச்சு
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர் ஒருவர், தான் பயணம் செய்த வாடகை டாக்சியில் வாலட்டை தவற விட்டு வந்துள்ளார். தவற விட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்த நிகழ்வு தனக்கு வியப்பையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளதாக அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது டிரெண்ட் ஆகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் சட்டத் திட்டங்கள் பின்பற்றப்படுவதாலேயே இது சாத்தியம் என நெட்டிசன்களும் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.

தனக்கு வியப்பை ஏற்படுத்தியது
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் கடுமையான சட்ட திட்டங்கள் அமலில் உள்ளன. சிறிய குற்றங்களுக்கு கூட கடுமையான தண்டனைகள் அங்கு விதிக்கப்படுகின்றன. சிறிய போக்குவரத்து விதிமீறல்களுக்கு கூட கடுமையான அபராதம், சில சமயம் சிறை தண்டனை கூட விதிக்கப்படுவதாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பார்க்க முடியும்.
இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த அலோக் திவாரி என்பவர் துபாயில் தனது பர்ஸை தவற விட்டதாகவும் அடுத்து ஒரு மணி நேரத்தில் தனக்கு நடந்த நிகழ்வு வியப்பையும், அதிர்ச்சியையும் கொடுத்ததாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளர். அவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அலோக் திவாரி கூறியிருப்பதாவது: -
1 மணி நேரத்தில் ஒப்படைத்துவிட்டனர்
துபாய் சென்று இருந்த போது அங்கு ஒரு வாடகை காரில் எனது வாலட்டை மிஸ் பண்ணிவிட்டேன். வாலட் மிஸ் ஆகிவிட்டது என நான் புகார் கூட அளிக்கவில்லை. அதே நேரத்தில் கேப் டிரைவர் அந்த வாலட்டை போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறார். போலீசார் என்னை டிராக் செய்து ஒரு மணி நேரத்தில் பர்சை ஒப்படைத்துவிட்டனர்.
அந்த வாலட்டை திறந்து பார்த்த போது 20 ஏஇடி (ஐக்கிய அரபு அமீரக பணம்) குறைவாக இருந்தது. மீதமுள்ள பணம் அப்படியே இருந்தது. 500 ஏஇடி அப்படியே இருந்தது. அது எப்படி காணாமல் போயிருந்தால் மொத்தமும் போயிருக்கும். வெறும் 20 ரூபாய் மட்டும் குறைந்து இருக்கிறதே என யோசித்து பார்த்த போதுதான் எனக்கு ஒரு விஷயம் பிடிபட்டது.
நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்
சரியாக அந்த தொகை டாக்சி கட்டணமாகும்" என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அதேவேளையில், தனது கமெண்டி பிரிவில் ஆப்பிள் பே பயன்படுத்தி டாக்ஸி கட்டணம் செலுத்தியதாகவும் கூறியுள்ளார். அங்குள்ள நேர்மைக்கும் அமைப்பும் மரியாதையை தருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. துபாயின் வலுவான நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மையை காட்டுவதாகவும் பதிவிட்டு வருகிறார்கள். சில நெட்டிசன்கள் கூறுகையில், துபாயில் கடுமையான தண்டனை அளிக்கப்படும். இதற்கு பயந்து பலரும் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார்கள்." என்று பதிவிட்டுள்ளார்.
மனித நேயமே முக்கியம்
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், என்னதான் துபாயில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டாலும், மனித நேயமே முக்கியம் என்றும், இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் நடந்திருந்தாலும் மனிதநேயமிக்க நிறைய பேர் இந்த கால் டாக்சி டிரைவர் செய்ததைத் தான் செய்திருப்பார்.. நீங்கள் பெரிதாக கூறும் அளவுக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications