துபாயில் பழகிய "அந்த" ஒரு விதி.. இந்தியாவில் பலமுறை உயிரே போய் இருக்கும்! பெண் சொன்ன அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் வசித்து வரும் இந்திய பெண் ஒருவர், அங்கு பழகிய ஒரு போக்குவரத்து விதி காரணமாக இந்தியாவில் சாலையை கடக்கும்போது பலமுறை கிட்டத்தட்ட விபத்தில் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். அப்படி என்ன விதி.. துபாயில் பழகிய இந்த விதி எப்படி இந்தியாவில் கிட்டத்தட்ட அவரது உயிரை பறிக்கும் அளவுக்கு மோசமானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

இந்தியர்கள் பலரும் வேலைக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அங்கு அவர்கள் பழகும் பழக்கம் இந்தியாவுக்கு வந்த பிறகும் தொடர்கிறது. அப்படி தான் இளம் பெண் ஒருவர் அங்கு கற்ற பழக்கம் இந்தியாவில் அவருக்கு பெரும் சிக்கலை தருவதாக மாறியிருக்கிறது.

Indian Woman in Dubai India UAE dubai

வாகனங்கள் வழிவிடும்

அதாவது துபாயில் பாதசாரிகள் சாலையை கடக்கும்போது வாகனங்கள் தானாகவே நின்று வழிவிடும் பழக்கம் இருக்கிறது. இதனால் அங்கு சாலையில் செல்லும் மக்கள் பயந்து பயந்து சாலையை கடக்க தேவையில்லை. அப்படி தான் இந்த பெண்ணும் அதற்கு பழகிவிட்டாராம். அதே பழக்கத்தை இந்தியாவிலும் பின்பற்றியதால் சிக்கலை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோவை அனுஷ்கா என்ற அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். துபாயில் சாலையை கடக்கும்போது வாகனங்கள் எப்படி நின்று பாதசாரிகளுக்கு வழிவிடுகின்றன என்பதையும் அவர் வீடியோவில் காட்டியுள்ளார். அதில் அனுஷ்கா துபாயில் ஒரு சாலையை கடக்கிறார். அவர் சாலையில் நடந்து செல்லும்போது, அவரை பார்த்ததும் அங்கு செல்லும் வாகனங்கள் நின்று அவருக்கு வழிவிடுகின்றன. இதனை சுட்டிக்காட்டிய அவர், துபாயில் வசிப்பதால் இதுபோன்ற நடைமுறைக்கு தான் மிகவும் பழகிவிட்டதாக கூறுகிறார்.

இந்தியா

அவர் மேலும் பேசுகையில், "துபாயில் இருக்கும் இந்த ஒரு விதி காரணமாக, இந்தியாவில் நான் பல முறை விபத்தில் சிக்கியிருப்பேன். இங்கு நான் சாலையை கடக்கிறேன். என்னை பார்த்தவுடன் இந்த கார்கள் அனைத்தும் நின்றுவிட்டன. துபாயில் பாதசாரிகள் சாலையை கடக்கும்போது வாகனங்கள் நிற்பதால், இந்தியாவிலும் சாலையை கடக்கும்போது வாகனங்கள் நின்றுவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

இங்கு இப்படிப் பழகிவிட்டதால், சாலையை கடக்கும்போது கார் நிற்கும் என்று நினைத்துவிட்டு, சாலையை முறையாக கவனிக்காமல் இந்தியாவில் பல முறை சாலைகளை கடந்துவிட்டேன். ஆனால், எந்த கார்களும் நிற்கவில்லை. கடைசி நொடியில் ஏதேதோ செய்து தப்பினேன்.. ஒவ்வொரு டிரைவர்களும் என்னை ஒவ்வொரு மாதிரி திட்டினார்கள். நான் தான் நின்று பார்த்து வர வேண்டும் எனவும் சொன்னார்கள்" என அனுஷ்கா தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

திட்டு

துபாயில் வசித்ததால் தனது சாலை கடக்கும் பழக்கமே மாறிவிட்டதாக அனுஷ்கா குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், "துபாயில் வாழ்வது உங்களை மாற்றிவிடும்... குறிப்பாக சாலையை கடக்கும் பழக்கம் மொத்தமாக மாறிவிடும்.. துபாயில் பாதசாரிகளுக்காக கார்கள் நின்று வழிவிடும். இதற்கு நான் மிகவும் பழகிவிட்டேன். இதனால் இந்தியாவில் எனக்கு முற்றிலும் வேறு ஒரு விதமான அனுபவம் ஏற்பட்டது. சாதரணாமக சாலையை கடக்க சென்றபோது, விபத்தில் சிக்கியிருப்பேன். தேவையற்ற திட்டுக்களையும் வாங்கினேன். இது மறக்கவே முடியாத ஒரு பாடம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெட்டிசன்கள்

அனுஷ்காவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. பலரும் துபாயின் போக்குவரத்து ஒழுங்கு, பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் சாலையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் குறித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அதேநேரம் இந்தியாவில் பலரும் டிராவிக் விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை எனவும் பலரும் விமர்சித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+