கழுத்தில் மஞ்சள் நிற விசில்.. கண்களை மூடி, கைகளை கூப்பி.."சாமீ.." உருகி பிரார்த்தனை செய்த தோனி மகள்!
துபாய்: ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என மிகவும் உருக்கமாக தோனி மகள் ஸிவா பிரார்த்தனை செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
Recommended Video
துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டியின் 50ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் சிஎஸ்கே அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி தோற்கடித்தது.
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை குவித்தது. 137 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஆட்டத்தை தொடங்கியது.

7 விக்கெட்டுகள்
இதில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை குவித்து வென்றது. இதன் மூலம் இந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிச் சென்றது. ஏற்கெனவே முதலிடத்தில் இருந்த சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் 9 போட்டிகளில் வென்று 4 போட்டிகளில் தோல்வியை தழுவி 18 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது ரசிகர்களுக்கு மன வருத்தத்தை தந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்த போட்டியில் தோனி இடம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தாலும் அந்த அணி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் தோனியின் மகள் ஸிவாதான். டெல்லி கேபிட்டல்ஸ் அணி விளையாடி கொண்டிருந்த போது 5 வயதே ஆகும் ஸிவா சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என நகங்களை கடித்துக் கொண்டு மிகவும் உன்னிப்பாக போட்டியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

புகைப்படம்
இதையடுத்து மிகவும் பரபரப்பாக காணப்பட்ட அவர் கண்களை மூடிக் கொண்டு இரு கைகளையும் கூப்பி தனது தந்தை இடம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்ல வேண்டும் என மனம் உருக பிரார்த்தனை செய்தார். இதையடுத்து அவரது பிரார்த்தனை புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஸிவா தி கியூட் பேபி
இணையதளத்தில் மிகவும் கியூட் பிக்சர் என மக்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆட்டம் நடந்து கொண்டிருந்த போதே இந்த புகைப்படம் வைரலானதால் ரசிகர்கள் , கவலைப்படாதேடா ஸிவா, நாம்தான் வெல்வோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் டிவிட்டரில் பதிவிட்டிருந்தனர். இன்னும் சிலர் 5 வயதே ஆகும் சிறு குழந்தைக்கு தனது தந்தையின் மீதும் அவர் சார்ந்த அணி மீதும் இத்தனை பற்றா என வியக்கிறார்கள். மேலும் கழுத்தில் மஞ்சள் நிற விசிலை ஸிவா அணிந்திருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீம் சாங் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க... என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications