திடீர் விஸ்வரூபம் எடுத்து பைனலில் நுழைந்த கேகேஆர்.. சிஎஸ்கே அணிக்கு கடும் சவால் காத்திருக்கு!
துபாய்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.
நடப்பு ஐபிஎல் சீசனை பொறுத்தளவில், பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோமா என்று தெரியாமல், கடைசி நேரத்தில் உள்ளே வந்த அணி மோர்கன் தலைமையிலான கேகேஆர்.
மும்பை அணி ஒருவேளை, தனது கடைசி லீக் போட்டியில் அதிக ரன் ரேட்டில் ஜெயித்திருந்தால், கேகேஆர் அப்படியே வெளியே போயிருக்க வேண்டியது. ஆனால் அரபு எமிரேட்ஸ் வந்த பிறகு கேகேஆர் சிறப்பாக ஆடத் தொடங்கியது. மேலும், மும்பை அணியால் உள்ளே வர முடியாத நிலையில் அடுத்த ரவுண்டில் கேகேஆர் காலடி எடுத்து வைத்தது.

வேறு மாதிரி மாறிய கொல்கத்தா
ஆனால் பிளே ஆப் வந்தது முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வேறுமாதிரி விசுவரூபம் எடுத்து விளையாட ஆரம்பித்துவிட்டது.
அதிருஷ்டம் நம்ம பக்கம் இருக்கிறது என கேகேஆர் வீரர்கள் நம்ப தொடங்கியதாலோ என்னவோ, பவர்பிளேயில் சிறப்பாக ஆடும் அணி வரிசையில் முதலிடத்தில் இப்போது கேகேஆர்தான் இருக்கிறது. ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்துள்ளனர். இவையெல்லாம் அந்த அணி வீரர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தியிருக்கும்.

கொல்கத்தா பந்துவீச்சு
கொல்கத்தாவில் பெர்குசன் சிறப்பாக பந்து வீசி வருகிறார். வருண் சக்கரவர்த்தி மற்றும் நரேனை எதிர்கொண்டு மிடில் ஓவர்களில் ரன் சேர்ப்பது பெரிய கஷ்டமாக உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராகவும் டெல்லி அணிக்கு எதிராகவும் இந்த மூன்று பேரும் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.

பைனலில் சிஎஸ்கே-கேகேஆர்
டெல்லி அணி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையையும் வெல்லவில்லை. ஆனால் 2012ம் ஆண்டு சிஎஸ்கேவும் கொல்கத்தாவும்தான் இறுதி போட்டியில் சந்தித்தன. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 190 ரன்களை குவித்தது. ஆனால், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த ஸ்கோரை வென்று காட்டி சாம்பியன் ஆனது கொல்கத்தா. 2012ம் ஆண்டு பைனல் மீண்டும் நினைவுக்கு வரும் என்பதால் அது கேகேஆருக்கு சாதகமாகிவிடும்.

கடைசி ஓவர் வெற்றி
மேலும், இன்றைய போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக கடைசி ஓவர் வரை வந்து திரில் வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கடைசி ஓவரில் போராடி கைக்கு வரும் வெற்றி என்பது எந்த ஒரு அணிக்கும் உற்சாகத்தை அளிக்க கூடிய விஷயம். இது அவர்கள் தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தி இருக்கும். இதுவும், சென்னை அணிக்கு தலைவலி கொடுக்கக் கூடிய விஷயம்.

தோனி படை
அதேநேரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. இந்த சீசன் முழுக்க சிறப்பாக விளையாடி வருகிறது அந்த அணி. எல்லாவற்றையும்விட, கேப்டன் தோனி வகுக்கும் வியூகங்கள் வேறு மாதிரி இருக்கும். என்னதான் கொல்கத்தா அணி ஆர்ப்பரித்து வந்தாலும் அதற்கு அணைகட்டி தடுக்கும் ஆற்றல் தோனி படைக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications