துபாய் மீது கொடூர தாக்குதல்.. ஈரானை தாக்க இஸ்ரேல் – அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அமீரகம்? பின்னணி
துபாய்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது ராணுவ தாக்குதல்களை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி ஐக்கிய அரபு அமீரகம் பரபரப்பான விளக்கத்தை அளித்துள்ளது.
பிப்ரவரி 28 முதல் அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இன்றும் தொடர்ந்து ஈரான் மீது போர் நடந்து வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள அரபு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.

அந்த வகையில் சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யூஏஇ) உள்ளிட்ட நாடுகளில் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. மேலும் கணிசமான அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
யூஏஇ-யில் பாதிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தை எடுத்து கொண்டால் அங்குள்ள அமெரிக்க தூதரகம், துபாய் விமான நிலையம், அபுதாபியில் உள்ள அல் தஃப்ரா விமானப்படை தளங்களில் ஈரான் தனது ஏவுகணை, டிரோன்கள் வழியாக தாக்குதல்கள் நடத்தி உள்ளது. மேலும் அபுதாபியில் அமைந்துள்ள முக்கிய துறைமுகமான ஜெபல் அலி துறைமுகம் புகழ்பெற்ற பர்ஜ் அல் அரப் ஹோட்டல் போன்ற கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தாக்குதலுக்கு தயாராகும் யூஏஇ
துபாய் மற்றும் அபுதாபியில் மக்களின் வழக்கமான வாழ்க்கையை பாதித்துள்ளது. அச்சத்துடன் பொதுமக்கள் நடமாட வேண்டிய சூழல் நிலவி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்கள் ஏராளமானவர்கள் வசித்து வரும் நிலையில் அவர்கள் உயிர் பயத்தில் உள்ளனர். இதற்கிடையே தான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது ராணுவத் தாக்குதல்களில் ஈடுபட ஐக்கிய அரபு அமீரகம் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
யூஏஇ பரிசீலனை
குறிப்பாக, ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ''ஐக்கிய அரபு அமீரகம் மீது நடைபெறும் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த பதிலடி தாக்குதலுக்கு தேவையான நடவடிக்கையை ஐக்கிய அரபு அமீரகம் பரிசீலனை செய்து வருகிறது'' என்று கூறப்பட்டு இருந்தது.
ஈரானுக்கு பெரிய சிக்கல்
இது பரபரப்பை கிளப்பியது. ஏனென்றால் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலில் ஈரான் நிலைக்குலைந்து போய் உள்ளது. இப்போது ஐக்கிய அரபு அமீரகமும் சேர்ந்து தாக்கினால் ஈரான் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ளும். குறிப்பாக ஈரான் மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இப்படியான சூழலில் தான் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
யூஏஇ தந்த விளக்கம்
இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் தனது அரசு செய்தி நிறுவனமான எமிரேட்ஸ் நியூஸ் ஏஜென்சி வழியாக அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளுித்துள்ளது. அதில், ''தொடர்ச்சியான ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக தனது தற்காப்பு நிலையில் மட்டுமே ஐக்கிய அரபு அமீரகம் கவனம் செலுத்துகிறது. பிற முடிவுகளை எடுக்கவில்லை.
தவறான தகவல்
ஏனென்றால் இந்தபோரில் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு தரப்பாக பங்கேற்கவில்லை. மேலும் நல்லுறவு, பதற்றம் தணிப்பு மற்றும் ஐநா சபையின் சாசனத்திற்கான உறுதிப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஈரான் மீதான எந்த தாக்குதல்களுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் தனது நிலம், கடல், வான்வெளியை பயன்படுத்த இதுவரை அனுமதிக்கவில்லை.
பத்திரிகைகள் தவறான தகவல்களை வெளியிட வேண்டாம். ஒரு தகவலை வெளியிடும் முன்பு அதுசார்ந்தவர்களிடம் விவரங்களை பெற வேண்டும்'' என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈரானை பழிக்கு பழியாக தாக்குதல் நடத்தப்போவது இல்லை. ஈரான் தாக்குதலில் இருந்து நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் விளக்கம் அளித்துள்ளது.
-
கொத்து கொத்தாக அமெரிக்க வீரர்கள் பலி? துபாய் உள்பட அரபு நாடுகளுக்கு ஈரான் கடும் வார்னிங் -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications