துபாயில் கருணாநிதி நூற்றாண்டு விழா! ஒன்று கூடிய ஐக்கிய அரபு அமீரக திமுகவினர்! களைகட்டிய நிகழ்ச்சி!
துபாய்: ஐக்கிய அரபு அமீரக திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டலில் நடைப்பெற்றது.
அமீரக திமுக பொறுப்பாரும், வெளிநாடு வாழ் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் எம்.எம்.அப்துல்லா, திருச்சி சிவா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கருணாநிதியின் சாதனைகளையும், அவரது இலக்கிய படைப்புகள் குறித்தும் எம்.எம்.அப்துல்லா எம்.பி. நினைவு கூர்ந்தார். கருணாநிதி கொண்டுவந்த இலவசத் திட்டங்கள், மகளிர் கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது குறித்தும், அரசு வருவாய் மேம்பட வழி வகுத்தது குறித்தும் விளக்கமாகப் பேசினார்.
தொடர்ந்து பேசியவர், கருணாநிதியின் ஜனநாயக அணுகுமுறைகள் குறித்தும் அதற்கான உதாரணங்களையும் கூறினார். மேலும், துபாயில் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமீரக திமுக பொறுப்பாளரும், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய குழு உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரானை பாராட்டினார்.

திமுக அயலக அணியின் அவசியம் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் எம்.எம்.அப்துல்லா எம்.பி. எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து பேசிய திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா, கருணாநிதிக்கும் தனக்கும் இருந்த உறவையும், தன்னுடைய வளர்ச்சிக்கு இளம் வயதிலிருந்தே கருணாநிதி பெரும் ஆதரவாக இருந்தது பற்றியும் அவரது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
திமுக இக்கட்டான சூழலில் இருந்த போதெல்லாம் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்ததால் தான் கருணாநிதி அனைவர் மனதிலும் நிலைத்து நிற்பதாக பேசினார்.

முன்னதாக வாழ்த்துரை வழங்குவதற்காக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் மன்சூர், ஹுசைன் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எல்.கே.எஸ்.மீரான், ஊடகவியாளர் முதுவை ஹிதயாத்துல்லா, ஆர்.ஜே சாரா, தமுமுக அப்துல் ஹாதி, கவிஞர் சசிகுமார், நஜ்முதீன், பிலால் அலியார், மதிமுக பாலா, கவிஞர் மரியம் கபீர், , அய்மான் சங்க நிர்வாகிகள்அதிரை சாகுல் ஹமீது, அப்துல் காதர் , முத்தமிழ் சங்க ஷா, ஈமான் ஜாகிர் காயிதே மில்லத் பேரவை ஹமீத் ரஹ்மான், பிரசன்னா , முஸ்லிம் லீக் பரக்கத் அலி , காமில் , தமிழ் செல்வன் , அமீரகத் தமிழ் சங்கம் சிலு, சோசியல் ஒர்கர் ஶ்ரீலேகா, டயானா, ரெஙகராஜன், EMAAR இயக்குனர் ஆனந்த் ,மேலாளர் முபாரக், ஜெஸீலா பானு, ஆர்.ஜே அஞ்சனா, தமுமுக அப்துல் ஹாதி , இப்ராஹிம், செல்வி சானியா, திருச்சி கோல்ட் ஹபீபுல்லாஹ் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமீரக திமுக நிர்வாகிகள் எம்.எம். முஸ்தஃபா, பிளாக் துலிப் செந்தில், அன்பு , அபுதாபி ஜாகிர் ஹுசைன், இளமுருகன், வி.எம்.பிரபு, இர்ஷாத், பருத்தி இக்பால், இஞ்சினியர்பாலா, கபீர், , பாண்டியன், தாரிக், கடையநல்லூர் உதுமான் , அமீன் , உதயநிதி ரசிகர் மன்ற
இணை செயலாளர் வி.கே.புரம் பாலா , தாவுத் , பாவை பாஹீம் , மேலாப்பாளையம் ஃபரீத் , ஜெகபர் அலி, மற்றும் ஏராளமான அமீரகம் வாழ் கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications