கேரள பெண்ணுக்கு அடித்த யோகம்..கடல் கடந்து போனவருக்கு லாட்டரியில் கொட்டிய பணமழை!
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த சுஜிதா என்ற பெண்ணுக்கு ரூ.24 லட்சம் லாட்டரியில் பரிசு அடித்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள சுஜிதா, "லாட்டரியில் பரிசு விழுந்தது எனக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனது கடன் பிரச்சினைகளை தீர்க்கவும் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் இந்த தொகையை பயன்படுத்த உள்ளதாக கூறியிருக்கிறார்.
இந்தியாவில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவது போல, ஐக்கிய அரபு அமீரகத்திலும் லாட்டரிகள் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்காக செல்லும் இந்தியர்களும் நமக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதா? என லாட்டரி விளையாட்டுகளில் பங்கேற்று சோதித்து பார்க்கிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரக லாட்டரி
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளா, தமிழ்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர். இவர்களில் லாட்டரி வாங்கும் சிலருக்கு அவ்வப்போது பரிசு அடித்து வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத திருப்பத்தை அள்ளி தந்துவிடுகிறது.. வேலைக்கு போன இடத்தில் அடிக்கும் இந்த எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் பல கோடிகளுக்கு அதிபதியாகி சொந்த நாட்டிற்கு திரும்புவதையும் பார்க்க முடிகிறது.
கடந்த ஆண்டு கூட ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்னையைச் சேர்ந்த, இன்ஜினியரான ஸ்ரீராம் ராஜகோபாலன் என்பவருக்கு முதல் பரிசான சுமார் ரூ.230 கோடி கிடைத்தது. கடந்த மாதத்தில் கூட தெலுங்கானாவை சேர்ந்த அனில் குமார் பெல்லா என்ற 29 வயது இளைஞருக்கு ரூ.240 கோடி ஜாக்பாட் அடித்தது.
ரூ.24 லட்சம் பரிசு
லாட்டரிகளை பொறுத்தவரை யாரோ ஒருவருக்கு பரிசு அடித்தாலும் பல லட்சம் பேருக்கு பரிசுத்தொகை எதுவும் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சும் என்பதே நிதர்சனம் என்றாலும் ஆசை யாரை விட்டது என்பது போல, பலரும் லாட்டரிகளை விளையாட்டுகளில் பங்கேற்பதை பார்க்க முடிகிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்.
கேரளாவை சேர்ந்தவர் சுஜிதா நிவார்தில். இவர் தனது கணவருடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசைத்து வருகிறார். இவர் சமீபத்தில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த லாட்டரியில் அவருக்கு ஒரு லட்சம் திர்ஹாம் பரிசாக அடித்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.24,28,632 பரிசாக அடித்துள்ளது.
இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது
இதனால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள சுஜிதா கூறுகையில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரத்தில் வசித்து வருகிறேன். லாட்டரியில் பரிசு விழுந்தது எனக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனது கடன் பிரச்சினைகளை தீர்க்கவும் பிள்ளையின் எதிர்காலத்திற்காகவும் இந்த தொகையினை பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்"என்றார்.
சுஜிதாவின் கணவர் கூறுகையில், நான் ஒரு புதிதாக ஒரு அக்கவுண்ட் தொடங்க இருக்கிறேன். சில தொகையை பயன்படுத்த எனது மனைவி என்னை அனுமதிப்பார் என்று நினைக்கிறேன். எனக்கும் கொஞ்சம் நிதி கிடைக்கும்" என்று ஜோக் அடித்தார்.
எத்தனை சதவீதம் வரி
ஐக்கிய அரபு அமீரத்தை பொறுத்தவரை லாட்டரி மூலம் கிடைக்கும் தொகைக்கு வரி கிடையாது. ஆகவே, பரிசாக விழும் தொகையை அப்படியே வெற்றியாளருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் இந்தியாவில் லாட்டரிகளுக்கு 30 சதவீதம் வரி உள்ளது. இது தவிர, 15 சதவீதம் துணை வரி, 4 சதவீதம் கல்வி சுகாதாரத்திற்கான செஸ் வரி ஆகியவை விதிக்கப்படும். இவையெல்லாம் கழித்தது போகத்தான் பரிசுத்தொகை வெற்றியாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
-
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications