10 ஆண்டுகளுக்கு பின் அடித்த யோகம்! அபுதாபிக்கு வேலைக்கு போனவருக்கு லாட்டரி கொடுத்த இன்ப அதிர்ச்சி
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி பிக் டிக்கெட் டிரா எனப்படும் லாட்டரி மிகவும் பிரபலம் ஆகும். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த நபருக்கு இந்த லாட்டரியில் ரூ.90 லட்சம் பரிசாக விழுந்துள்ளது. 10 ஆண்டுகளாக லாட்டரி வந்த அவருக்கு தற்போது அதிர்ஷ்டம் கொட்டியிருப்பதாக அவர் கூறினார்.
வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் பலரும் வேலைக்கு செல்கிறார்கள். கட்டுமான தொழில்கள், டிரைவர்கள் என பல்வேறு பணிகளிலும் இந்தியாவை சேர்ந்த பலரும் அங்கு பணியாற்றுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலரும் அபுதாபி, துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக பகுதிகளில் வேலை செய்கிறார்கள்.

அபுதாபி லாட்டரி
ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி பிக் டிக்கெட் டிரா எனப்படும் லாட்டரி மிகவும் பிரபலம். வாழ்நாளில் தங்களுக்கும் ஒரு நாள் அதிர்ஷ்டம் அடிக்காதா என்ற ஆசையில் இந்திய தொழிலாளர்கள் பலரும் இந்த லாட்டரிகளை வாங்குவதை பார்க்க முடிகிறது. இப்படி வாங்கும் போது ஒரு சிலருக்கு அதிர்ஷ்டமும் கை கொடுக்காமல் இல்லை.
10 ஆண்டுகளுக்கு பின் அதிர்ஷ்டம்
பலருக்கும் எந்த பரிசும் விழாது என்பதுதான் நிதர்சனம் என்றாலும் ஒரு சிலருக்கு பல கோடி பரிசுத் தொகை விழுவதால் அந்த எதிர்பார்ப்பில் பலரும் டிக்கெட் வாங்குகிறார்கள். சரி அதெல்லாம் இருக்கட்டும். இங்கே விஷயத்திற்கு வருவோம். கேரளாவை சேர்ந்தவர் ஷைஜூ கரயாத். அபுதாபியில் வேலை செய்து வரும் இவருக்கு அங்குள்ள பிக் டிக்கெட் லாட்டரியை வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக டிக்கெட் வாங்கி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் இவருக்கு Dh390,000 (இந்திய மதிப்பில் சுமார் 90 லட்சம் ரூபாய்) பரிசாக அடித்துள்ளது. 4 பேரில் ஒருவராக இவருக்கும் பரிசுத்தொகை அடித்துள்ளது. அதேபோல, கேரளாவை சேர்ந்த மற்றொருவருக்கு இந்த வாரம் நடைபெற்ற குலுக்கலில் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம் பரிசாக அகில் ஸ்ரீகந்த பிரசாத் என்பவருக்கு அடித்துள்ளது.
முதலீடு செய்யப் போகிறேன்
34 வயதான இவர் துபாயில் கடந்த 8 ஆண்டுகளாக மெக்கானிக்கல் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து டிக்கெட் வாங்கியிருக்கிறார். துபாய்க்கு வேலைக்கு சென்றதும் அங்கு சக ஊழியர்கள் மூலமாக லாட்டரியை பற்றி தெரிந்து இருக்கிறார். அப்போது முதலே லாட்டரி வாங்கி வந்தவருக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியது.
ஆனால் எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக இந்த பரிசுத்தொகை அடித்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் எனக்கு லாட்டரி பரிசு விழுந்தது என்று கூறியதை கூட நம்பவில்லை. எனக்கு பரிசுத்தொகை விழுந்து இருப்பதாக போன் காலில் தகவல் தெரிவித்தனர். அப்போது யாரோ என்னை விளையாட்டுக்கு தான் கலாய்க்கிறார்கள் என நினைத்தேன். பின்னர் யூடியூப் சேனலில் வீடியோவை பார்த்தேன். அதன் பிறகே எனக்கு லாட்டரி பரிசு விழுந்ததை நம்பினேன். தனக்கு பரிசாக கிடைத்துள்ள பணத்தை பயனுள்ள வகையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன்" என்றார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications