அபுதாபியில் ரஜினிகாந்த்.. லுலு குழும தலைவர் எம்ஏ யூசுப் அலியுடன் ரோல்ஸ் ராய்ஸில்.. மாஸ் என்ட்ரி
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் லூலு குழும தலைவர் எம்ஏ யூசுப் அலியுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் நடிகர் ரஜினிகாந்த் பயணித்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் வேட்டையன் படப்பிடிப்பினை முடித்தார். அடுத்தபடமான கூலி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த போஸ்டர் வீடியோ அண்மையில் வெளியானது. இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது ஓய்வெடுத்து வரும் நிலையில், அண்மையில் ஐக்கிய அரபு அமீகரத்தின் தலைநகரான அபுதாபிக்கு சென்றார். அங்கு புகழ்பெற்ற சில்லறை வர்த்தக நிறுவனமான லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலி மற்றும் மற்ற உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

ஓய்வு எடுப்பதற்காக அமீரகம் சென்ற நடிகர் ரஜினிகாந்த், அபுதாபியில் லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலியை சந்தித்து பேசியதுடன், அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
லுலு குரூப் இன்டர்நேஷனல் என்ற பெயரில் அழைக்கப்படும் லுலு குழுமம் ஐக்கிய அரபு அமீகரத்தின் தலைநகரான அபுதாபியை தலைமையிடமாக கொண்டு ஹைப்பர் மார்க்கெட் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களை உலகம் முழுவதும் அமைத்துள்ளது. உலகம் முழுவதும் 239 இடங்களில் செயல்படும் லுலு மால் இந்தியாவில் பல்வேறு நகங்களில் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர், பாலக்காடு, தமிழ்நாட்டில் கோவை, கர்நாடகாவில் பெங்களூர், தெலுங்கானாவில் ஹைதராபாத், உத்தரப்பிரதேசத்தில் லக்னோ போன்ற இடங்களில் மால்களை திறந்துள்ளது. இதுதவிர சென்னை, கோட்டயம், அஹமதாபாத், டெல்லி, நொய்டா உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் மால்களை அமைக்கும் பணியில் இறங்கி உள்ளது.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் புதிய மால்களை திறக்க ஆர்வம் காட்டி வரும் லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலி மற்றும் மற்ற உயர் அதிகாரிகளை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசி இருப்பபது மரியாதை நிமிர்த்தமாகவே இருக்கும் என்று சொல்கிறார்கள். ரஜினிகாந்த்தும் எம்.ஏ.யூசுப் அலியும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்பட்டாலும் இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
The owner of Lulu Group of Companies, Mr. Yusuf, took #Thalaivar for a jolly ride in his Rolls Royce in Abu Dhabi.#ThalaivarNirandharam#Vettaiyan#Coolie pic.twitter.com/z3WwNNcVEU
— WarLord (@Mr_Ashthetics) May 20, 2024
லுலு குழுமத்தின் சிஓஓ சைஃபி ரூபாவாலாவையும் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பின் படத்தையும் சைஃபி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இந்தியாவின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவருடன் இணையும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 171வது படம் ஆகும். இப்படத்தில் யார் யார் உடன் நடிக்க போகிறார்கள் என்பது விரைவில் தெரிய வாய்ப்பு உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications