"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான்
துபாய்: அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரான் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் விமானச் சேவை மொத்தமாக முடங்கியுள்ள சூழலில், அங்கிருந்து வெளியேறச் செல்வந்தர்கள் கோடிக் கணக்கில் பணம் செலுத்தக் கூட ரெடியாக இருக்கிறார்களாம். அங்குச் சிக்கிய செல்வந்தர்கள் எப்படி வெளியேறுகிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகக் கடந்த சில நாட்களாகத் துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இன்று தான் அங்கு விமானச் சேவை மெல்லத் தொடங்கியுள்ளது. இருப்பினும், அதிலும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

சிக்கிய செல்வந்தர்கள்
இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் செல்வந்தர்கள் பலரும் அங்கேயே சிக்கியுள்ளனர். வழக்கமான விமானச் சேவை இல்லாததால் அவர்கள் தனி விமானங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
ரூ.3.2 கோடி
இதனால் தனி விமானங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்தளவுக்குத் தனி விமானங்கள் இல்லாததால் விமான கட்டணங்கள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன. மத்திய கிழக்கிலிருந்து வெளியேறத் தனி விமானங்களை வாடகைக்கு அமர்த்த செல்வந்தர்கள் $350,000 (அதாவது இந்திய மதிப்பில் ₹3.20 கோடி) வரை செலவிடுவதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்னும் சிலர் தரைவழியாகச் சவுதி சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஐரோப்பா செல்கிறார்கள். இருப்பினும், அதற்கு 10 மணி நேரம் காரிலேயே பயணிக்க வேண்டி இருக்கிறது. ஆனால், எப்படியாவது அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறினால் போதும் என்றே பலரும் நினைப்பதால், நீண்ட தூரம் பயணிக்கவும் பயணிகள் தயாராக உள்ளனர்.
சவுதி மட்டுமே ஆப்ஷன்
இது தொடர்பாக அங்குள்ள பிரைவேட் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அமிர் நரான் கூறுகையில், "இப்போது மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேற விரும்பும் மக்களுக்குச் சவுதி அரேபியா மட்டுமே ஒரே ஆப்ஷனாக இருக்கிறது" என்றார். சர்வதேச நிதி நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளும், விடுமுறைக்காக அமீரகம் வந்த பணக்காரர்களும் கூட எப்படியாவது வெளியேறினால் போதும் என்றே இருக்கிறார்கள்!
இது தொடர்பாக ஐக்கிய அமீரகத்தின் செக்யூரிட்டி நிறுவனமான அல்மா ரிஸ்கில் பணிபுரியும் இயன் மெக்கவுல் மேலும் கூறுகையில், "குடும்பத்தினர், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் எனப் பலரும் எங்களை அணுகியுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தினால் உடனடியாக இப்பகுதியை விட்டு வெளியேற விரும்புகின்றனர். இதற்காக அவ்வளவு தொகையை வேண்டுமானாலும் செலவழிக்க அவர்கள் தயாராக உள்ளனர்" என்றார்.
நீண்ட பயணம்
மத்திய கிழக்கில் இருந்து பாதுகாப்பாக வெளியேற விரும்புபவர்களுக்குச் சவுதி தலைநகர் ரியாத் மட்டுமே ஒரு முக்கியமான வழித்தடமாக இருக்கிறது. அந்த பிராந்தியத்தில் செயல்படும் ஒரு சில விமான நிலையங்களில் ஒன்றாக ரியாத் இருக்கிறது. இதனால் துபாய், அபுதாபி, கத்தார் மற்றும் பஹ்ரைனில் சிக்கிய செல்வந்தர்கள் ரியாத்துக்கு நீண்ட தூரம் பயணம் செய்கின்றனர். அங்கு தனி விமானங்கள் மூலம் வெளியேற முயல்கிறார்கள்.
இந்த பயணத்தை எளிதாக்கத் தனியார் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக எஸ்யூவி வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி, துபாயிலிருந்து ரியாத்துக்கு மக்களை 10 மணி நேரப் பயணமாக அழைத்துச் செல்கின்றன. அங்கிருந்து தனி விமானங்கள் மூலம் கிளம்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரியாத் நகர மையத்திலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் தான் இது நடக்கிறது.
ஒரே வழி
இந்த விமான நிலையம் ஐந்து பயணிகள் முனையங்களைக் கொண்டுள்ள நிலையில், ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளுக்கு விமானச் சேவைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதுவே இப்போது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேற ஒரு புள்ளியாக இருக்கிறது!
அதிர்ஷ்டவசமாக, ஈரான் தாக்குதல்களில் சவுதி இதுவரை பெரியளவில் பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை. இதனால் அதன் வான்வெளி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்குச் சவுதி அல்லது அதன் வான்பகுதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்று பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அளித்த உறுதிமொழியே இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வழக்கமாக ஆடம்பரத்தின் மையமாகத் திகழும் துபாய் நகரம், தற்போது ஹை அலர்ட் நிலையில் உள்ளது. துபாயில் எந்தவொரு அமெரிக்க ராணுவத் தளங்களும் இல்லாவிட்டாலும், நகரம் முழுக்க தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது!
-
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
கதவை தட்டும் ரெசிஷன்.. கச்சா எண்ணெய் 150 டாலர் தொடும்.. பயமுறுத்தும் கணிப்புகள் -
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங்












Click it and Unblock the Notifications