அமீரக திமுகவினரோடு கலந்துரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்! அரசின் சாதனைகளை பரப்ப அறிவுறுத்தல்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுகவினரோடு கலந்துரையாடினார்.

மேலும் தமிழக அரசின் சாதனைகளையும், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுக்கும் திட்டங்கள் பற்றியும் சமூக வலைதளப்பக்கங்கள் மூலம் பரப்புமாறு அறிவுறுத்தினார்.

அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்து பேசுவதற்காக அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், என பல பகுதிகளில் இருந்தும் துபாய் வந்திருந்தனர்.

அமீரக திமுக

அமீரக திமுக

கல்வி சுற்றுலாவுக்காக அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுடன் துபாய் சென்றிருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அமீரக திமுக சார்பில் தனிப்பட்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள கட்சிக்காரர்களோடு அமைச்சர் அன்பில் மகேஷை சந்திக்க வைப்பதற்கான நிகழ்வுக்கு அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான் ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி நடைபெற்ற நிகழ்வில் அமீரகத்தில் பணியாற்றி வரும் திமுகவினர் திரளாக கலந்துகொண்டனர்.

அமைச்சர் பேச்சு

அமைச்சர் பேச்சு

தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசின் சாதனைகளையும், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுக்கும் திட்டங்கள் பற்றியும் சமூக வலைதளப்பக்கங்கள் மூலம் பரப்புமாறு அறிவுறுத்தினார். மேலும், கடல் கடந்து வந்து பணியாற்றினாலும் கூட கட்சிப் பணிகளில் ஆர்வம் குறையாமல் செயலாற்றி வரும் அமீரக திமுகவினருக்கு பாராட்டும் வாழ்த்தும் கூறினார்.

அடிக்கடி நிகழ்ச்சி

அடிக்கடி நிகழ்ச்சி

தமிழகத்தில் எப்படி ஆக்டிவாக செயல்படுகிறதோ அதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்திலும் திமுகவை ஆக்டிவாக இயக்கி வரும் எஸ்.எஸ்.மீரான், அடிக்கடி தமிழகத்திலிருந்து திமுக முக்கியப் பிரமுகர்களை அழைத்துச் சென்று விழா நடத்தி வருகிறார். அண்மையில் கூட வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியை அழைத்துச் சென்று முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதை ஒட்டி நிகழ்ச்சி நடத்தினார்.

வளைகுடா நாடுகள்

வளைகுடா நாடுகள்

மற்ற நாடுகளை காட்டிலும் வளைகுடா நாடுகளில் திமுக மீது பற்றும் பாசமும் கொண்ட ஆயிரக்கணக்கானோர் தொழிலாளிகளாக, அதிகாரிகளாக, ஊழியர்களாக, பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+