பிளை துபாய் துணை விமானியின் நடவடிக்கையை முன்பே கண்டறிந்த ஓமன் விமான நிறுவனம்! விசாரணையில் புதிய ஷாக்

Subscribe to Oneindia Tamil

துபாய்: பிளை துபாய் விமானத்தை தரையில் மோதி அசம்பாவிதத்தை ஏற்படுத்த முயன்றதாக கூறப்படும் துணை விமானி ஓமன் நாட்டை சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓமன் ஏர் நிறுவனத்தில் பயிற்சி துணை விமானியாக அவர் பணியாற்றியதும் தெரியவந்துள்ளது. அப்போது பயங்கரவாத சிந்தனை கொண்டவராக இருந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு நிர்வாக பணிகளில் அவர் பணி அமர்த்தப்பட்டதாக ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே தடை விதிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் எப்படி பிளை துபாய் விமான நிறுவனத்தில் பணியில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டார்? என்பது குறித்து விசாரணைக்குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

flydubai flight aircraft Dubai Oman

174 பேர் பயணம்

துபாயில் இருந்து கடந்த 30 ஆம் தேதி இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு பிளை துபாய் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 174 பேர் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, விமானத்தின் முதன்மை விமானியாக இருந்த இந்தியாவை சேர்ந்த ஸ்மித் மச்சாரை தாக்கிவிட்டு, விமான கட்டுப்பாட்டை எடுத்து தரையில் மோத வைக்க ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி முயற்சித்துள்ளார்.

பின்னணியில் ஈரான் உள்ளதா?

தனக்கு ஏற்பட்ட வெட்டு காயத்தையும் பொருட்படுத்தாமல், துணை விமானியுடன் சண்டையிட்டு காக்பிட் அறையை திறந்தார். இதனால், சக பயணிகள் உள்ளே வந்து, அசம்பாவித திட்டத்துடன் இருந்த துணை விமானியை மடக்கி பிடித்து விமானத்தை அவசர அவசரமாக சவுதி அரேபியாவில் தரையிறக்கினர். கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த விமானி தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

விமானத்தை தரையில் மோதி அசம்பாவிதத்தை ஏற்படுத்த முயன்றதாக கூறப்படும் துணை விமானி ஓமன் நாட்டை சேர்ந்தவர் ஆவார். ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைக்கப்பட்ட இவருக்கு பின்னணியில் ஈரான் உள்ள்தா? அல்லது வேறு ஏதேனும் பின்னணியுடன் உள்ளாரா? என்று தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஓமனை சேர்ந்த அந்த விமானி குறித்து புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஓமன் ஏர் நிறுவனத்தில் துணை விமானி

அதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஓமன் ஏர் நிறுவனத்தில் பயிற்சி துணை விமானியாக அவர் பணியாற்றிய போது பயங்கரவாத சிந்தனை கொண்டவராக இருந்தகாவும் அவரது பயங்கரவாதம் தொடர்பன பொருட்கள் அவரது உடமையில் இருந்தும் கண்டறியப்பட்டதாகவும் இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு நிர்வாக பணிகளில் அவர் பணி அமர்த்தப்பட்டதாகவும் ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, தடை விதிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் எப்படி பிளை துபாய் விமான நிறுவனத்தில் பணியில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து விசாரணைக்குழு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. சந்தேகத்திற்கிடமான அந்த விமனியின் பெயர் தற்போது வரை வெளியிடப்படவில்லை. சவுதி அரேபியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த துணை விமானி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+