குவைத் தீ விபத்தில் 53 பேர் பலி: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்- மருத்துவமனைகளில் 30 இந்தியர்கள்!
துபாய்: 53 பேரை பலி கொண்ட குவைத் தீ விபத்தில் பலியானோருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
குவைத்தின் மங்கஃப் நகரில் 6 மாடி கட்டிடம் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி மொத்த 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

குவைத் தீ விபத்து தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமது எக்ஸ் பக்கத்தில், குவைத் தீ விபத்து தகவலால் அதிர்ச்சி அடைந்தேன். 40க்கும் அதிகமானோர் பலியாகினர். 50-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்திருந்தார். (இதன் பின்னர் பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரித்தது).

இதனிடையே குவைத்துக்காக இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வாதிகா, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். குவைத் மருத்துவமனைகளில் 30-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications