போர்? சவுதியை காக்க எந்த எல்லைக்கும் செல்வோம்! ஹவுதி போராளிகளுக்கு பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

துபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், பாகிஸ்தான் ராணுவம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவை நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த இக்கட்டான நேரத்தில், சவுதி அரேபியாவைப் பாதுகாக்க பாகிஸ்தான் எந்த எல்லைக்கும் சென்று களமிறங்கும் என்று அந்நாட்டு ராணுவம் மிகத் தெளிவாக எச்சரித்துள்ளது.

இஸ்லாமியர்களின் மிக முக்கிய புனிதத் தலங்களான மக்கா மற்றும் மதீனாவைப் பாதுகாப்பது தங்களின் முதன்மையான கடமை என்றும், இதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை என்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

pakistan saudi arabia

பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கூறியது என்ன?

பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான ஐ.எஸ்.பி.ஆர் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, பிரபல 'அரப் நியூஸ்' செய்தி நிறுவனத்துக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் பேசும்போது, "சவுதி அரேபியாவுடன் நாங்கள் வெறும் பேச்சுவார்த்தை அளவில் மட்டும் நிற்கவில்லை. ராஜரீக ரீதியாகவும், நேரடி ராணுவ பலத்துடனும் தோளோடு தோள் கொடுத்து சவுதி சகோதரர்களுடன் நிற்கிறோம். சவுதி அரேபியாவின் எல்லைகளைக் காக்கவும், அங்குள்ள புனிதத் தலங்களான மக்கா மற்றும் மதீனாவைப் பாதுகாக்கவும் பாகிஸ்தான் எந்த எல்லைக்கும் போகத் தயங்காது. எங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு என்பது மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ ரீதியாக மிகவும் ஆழமானது, பிரிக்க முடியாதது" என்று அவர் கூறினார்.

மேலும், சவுதி அரேபியா மீது எந்த ஒரு நாடு அல்லது ஆயுதக் குழு தாக்குதல் நடத்தினாலும், அதைத் தடுத்து நிறுத்த பாகிஸ்தான் தொடர்ந்து துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திடீரென இந்த அறிக்கை வரக் காரணம் என்ன?

சமீப நாட்களாக ஏமனில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் எல்லைப் பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களைக் குறிவைத்து தொடர்ந்து டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

வியாழக்கிழமை அன்று, சவுதி வான் பாதுகாப்புப் படை வானிலேயே ஒரு ஹவுதி டிரோனை சுட்டு வீழ்த்தியது. ஆனால், அந்த டிரோனின் உடைந்த பாகங்கள் கீழே விழுந்ததில் தாய்ஃப் பகுதியில் இருந்த ஒரு வெளிநாட்டுத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சவுதி அரேபியா தனது எல்லைப் பாதுகாப்பையும், மக்காவுக்கு வரும் யாத்ரீகர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யக் கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது. இந்தத் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் ராணுவம் தனது முழு ஆதரவை வெளிப்படையாக அறிவித்துள்ளது.

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் என்றால் என்ன?

கடந்த 2026 ஆகஸ்ட் 7-ஆம் தேதி சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை விதி மிகவும் எளிமையானது, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும். நேட்டோ அமைப்பில் இருப்பதைப் போன்ற ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஏற்பாடு இதுவாகும்.

கடந்த வாரம் வரை, பாகிஸ்தான் அரசு இந்த ஒப்பந்தத்தின் கீழ் உடனடியாக ராணுவ நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்றும், நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் சற்று அடக்கியே வாசித்தது. ஆனால், இப்போது நிலைமை தீவிரமடைந்து புனித நகரங்களுக்கு அருகிலேயே தாக்குதல் அச்சுறுத்தல் ஏற்பட்டதால், பாகிஸ்தான் ராணுவம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நேரடியாக களமிறங்கத் தயார் என அறிவித்துள்ளது.

ஏற்கனவே சவுதியில் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் படைகள்

பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக வலுவான ராணுவ உறவு உள்ளது. ஏமன் போர்ப் பதற்றங்கள் தொடங்கிய பிறகு, மே மாத நிலவரப்படி பாகிஸ்தான் சுமார் 8,000 தரைப்படை வீரர்களை சவுதி அரேபியாவில் நிலைநிறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தானின் ஜேஎஃப்-17 (JF-17) போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் வான்வழியே வரும் ஏவுகணைகளைத் தடுத்து அழிக்கும் எச்கியூ-9 ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளும் சவுதி அரேபியாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

போரைத் தடுக்க நடக்கும் திரைமறைவு சமாதான முயற்சிகள்

பாகிஸ்தான் ராணுவம் சவுதிக்கு ஆதரவாகத் துப்பாக்கியைத் தூக்கத் தயார் என்று கூறினாலும், இந்த மோதல் ஒரு பெரிய போராக மாறிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது.

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்குப் பின்னால் ஈரான் நாடு ஆதரவாக இருக்கிறது. இதனால், சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு ஈரானிடம் பேசி கட்டுப்படுத்துமாறு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.

சீனா நாடும் தன் பங்கிற்கு ஈரானிடம் பேசி, செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல்களுக்கு ஆபத்து ஏற்படாமல் ஹவுதிகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி வருகிறது. அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் பாகிஸ்தான் தொடர்ந்து சர்வதேச அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பிரச்சனை என்ன?:

ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் எல்லைகளை நோக்கி டிரோன்களை ஏவித் தாக்குகிறார்கள். இதற்கு பாகிஸ்தான் அரசோ.. சவுதி அரேபியா எங்கள் சகோதர நாடு; அதோடு மக்கா, மதீனா இருக்கும் புனித பூமி. எனவே சவுதிக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், பாகிஸ்தான் ராணுவம் முழுப் பலத்துடன் களத்தில் இறங்கி சவுதியைக் காப்பாற்றும்.

பாகிஸ்தானின் இந்த கடுமையான எச்சரிக்கை, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் சக்திகளுக்கும் விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய கிழக்கு பகுதியில் அடுத்தடுத்து நிகழும் இந்த மாற்றங்கள், ஒட்டுமொத்த சர்வதேச அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+