மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா.. கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு.. பெட்ரோல், டீசல் விலை என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் விலை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
துபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் விலை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது உலகம் முழுக்க 88 நாடுகளில் பரவி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.உலகம் முழுக்க 119,177 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.உலகம் முழுக்க 4,295 கொரோனாவால் பலியாகி உள்ளனர்.சீனாவில் 80,778 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர் சீனாவில் 3,158 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

கச்சா எண்ணெய்
இந்த கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க மார்க்கெட் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து நேற்று வரை சரிவை சந்தித்தது. இன்று காலை மட்டும் பங்கு சந்தை கொஞ்சம் ஏற்றத்துடன் தொடங்கியது. அதன்பின் மீண்டும் சென்செக்ஸ் சரிவை சந்தித்தது. ஆனால் இந்த ஏற்றம் மற்றும் சரிவு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேவை குறைவு
உலகம் முழுக்க பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது. 68 நாடுகளில் விமான போக்குவரத்து குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் எரிபொருள் தேவை குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் கொள்முதல் பெரிய அளவில் சார்ந்துள்ளது.இன்னொரு பக்கம் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

வைரஸ் எப்படி
மத்திய கிழக்கில் உள்ள 9 நாடுகளில் மொத்தம் அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் விலை சரிந்தது. கச்சா எண்ணெய் விலை 11.5% சரிந்தது. தற்போது இதன் விலை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றம் காண தொடங்கி உள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் ரகம் மட்டும் 3.9% அதிகரித்துள்ளது.

பெட்ரோல் விலை
WTI கச்சா எண்ணெய் 3.3% அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 8 சதவிகிதம் அதிகரித்தது. ஆனால் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.டெல்லியில் பெட்ரோல் விலை 70.290 ரூபாய்க்கும், டீசல் விலை 63.101 ரூபாய்க்கும் விற்கிறது. மும்பையில் பெட்ரோல் விலை 75.99ரூபாய்க்கும், டீசல் விலை 65.97 ரூபாய்க்கும் விற்கிறது.

சென்னை நிலை
பெங்களூரில் பெட்ரோல் விலை 73.41 ரூபாய்க்கும், டீசல் விலை 66.84 ரூபாய்க்கும் விற்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை 73.020ரூபாய்க்கும், டீசல் விலை 68.27 ரூபாய்க்கும் விற்கிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 76.47 ரூபாய்க்கும், டீசல் விலை 66.480 ரூபாய்க்கும் விற்கிறது. வரும் நாட்களில் பெட்ரோல் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்று கூறுகிறார்கள்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications