துபாயில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்.. க்ரீன் குளோப் அமைப்பு அசத்தல் ஏற்பாடு!

Subscribe to Oneindia Tamil

துபாய்: பெண்களின் நலம் மற்றும் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில், பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி துபாயில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் "PINK HOPE - Celebration of Life" என்ற பெயரில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. துபாய் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் உள்ள துபாய் பொது நூலகத்தின் ஆதரவோடு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு க்ரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கினார்.

Pink Hope Dubai

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாகக் குணப்படுத்த முடியும் என்பதை மக்களுக்குப் புரிய வைப்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் ஆகும். நிகழ்ச்சியில் பிரைம் மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பெண்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகளைச் செய்தனர். மகப்பேறு மருத்துவர் கியானி காஸ்டில்லோ மற்றும் உணவியல் நிபுணர் முஜீபுர்ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு பெண்களின் உடல் நலம், ஆரோக்கியமான உணவு முறைகள் குறித்துப் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினர். புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில் 4 பேர் தங்களது தலைமுடியை தானமாக வழங்கியது அனைவரையும் நெகிழ வைத்தது.

Pink Hope Dubai

இதுமட்டுமின்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான சுவரொட்டிப் போட்டிகள், முக ஓவியம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர்களாக சுசித்ரா குமார், கதீஜா இப்ராஹிம், அஸ்மா இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக ராபியா தாரிக், சபீன் ஜாவிட், மூத்த பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், ஜாஃபர் அலி, யாசின், மணவாளன், அஸம் பாஷா, ஜபீர், கமால், நஜீம், சமீர் அகமது, ஷாஹீத் ரஹ்மான், மாஜிதா பேகம், நாசர், ஜெயச்சந்திரன், கவிஞர் சிவமணி, பீமா சிராஜ், பாசிலா, ஜெஸிலா நவுபல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

Pink Hope Dubai

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுலோச்சனா வீரகுமார், ரசூல், தாஹிர், அப்துல் ரஹ்மான், ஹபீப் அபூபக்கர், சாபீர் மற்றும் பீர் முஹம்மது ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விவர்தினி வீரகுமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். வந்திருந்த அனைவருக்கும் இலவச உணவும் சிற்றுண்டியும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற உதவிய பொது நூலக நிர்வாகத்திற்கும், மருத்துவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+