பாதுகாப்பு துறையில் முக்கிய ஒப்பந்தம்.. சவுதி சென்ற பிரதமர் மோடி திட்டம்.. சல்மானை சந்திக்கிறார்!
சவுதி அரேபியா சென்று இருக்கும் பிரதமர் மோடி இன்று பாதுகாப்பு தொடர்பான முக்கிய திட்டங்களில் கையெழுத்திட இருக்கிறார்.
Recommended Video
ரியாத்: சவுதி அரேபியா சென்று இருக்கும் பிரதமர் மோடி இன்று பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருக்கிறார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்று இருக்கிறார். சவுதியில் நடக்கும் வருடாந்திர உயர்மட்ட பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
அதேபோல் பிரதமர் சவுதி அரசர் மற்றும் முடி இளவரசர் ஆகியோரை இந்த பயணத்தில் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடி மற்றும் முடி இளவரசர் முகமது பின் சல்மான் சந்திப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேட்டி அளித்தார்
இந்த நிலையில் சவுதி அரேபியா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அதில் இந்தியாவும் சவுதியும் மிகவும் நெருக்கமான நட்பு நாடுகள். இரண்டு நாடுகள் இடையே நிறைய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாகவும், பாதுகாப்பு தளவாட விற்பனை தொடர்பாகவும் நிறைய ஒப்பந்தங்கள் இனி செய்ய இருக்கிறோம்.

இரண்டு நாடுகள் எப்படி
இரண்டு நாடுகளும் தங்களுடைய பாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் காட்டுகிறது. இதனால் பாதுகாப்பு விஷயத்தில் இரண்டு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து செயலாற்றும். இந்தியாவில் பொருளாதாரம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சரி ஆகிக்கொண்டு இருக்கிறது.

சாதகமான சூழ்நிலை
இந்தியாவில் வியாபாரம் செய்வதற்கு சாதகமான சூழ்நிலையை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். முதலீட்டிற்கான சூழ்நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா திட்டங்கள், ஸ்கில் இந்தியா போன்ற திட்டங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

நிறைய ஒப்பந்தம்
என்னுடைய இந்த பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. சவுதி அரேபியா உடன் எண்ணெய் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் செய்யப்படும். பாதுகாப்பு மற்றும் வளங்கள் தொடர்பான ஒப்பந்தங்களுக்கு இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும், என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications