விமானத்தை நேரடியாக தாக்கிய ஏவுகணை.. பைலட் உள்பட 3 பேர் பலி.. சவுதியை கலங்கவிடும் ஹவுதிகள்
ரியாத்: சவுதி அரேபியா தலைநகர் ரியாத் விமான நிலையத்தில் விமானத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த நாட்டை சேர்ந்த பைலட் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். சவுதி அரேபியாவிற்கும், ஹவுதிகளுக்கும் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் இருதரப்புக்கும் இடையேயான பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.

சவுதி அரேபியாவிற்கும், ஏமனில் செயல்பட்டு வரும் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளுக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது.
ஹவுதி அமைப்பினர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் அபா விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இதுவரை 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனாலும் ஹவுதிகள் அடங்கவில்லை. நேற்றைய தினமும் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.2 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. ஒன்று விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டது. இன்னொரு தாக்குதல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சவுதியா ஏர்லைன்ஸை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் சவுதியா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான 3 விமானங்கள் தீப்பற்றி எரிந்ததாக தகவல்கள் வெளியாகின ஆனால் அதனை சவுதி அரேபியா தற்போது வரை உறுதி செய்யவில்லை. இதற்கிடையே தான் ஹவுதிகள் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 3 பேரும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். இதில் ஒருவர் சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பைலட் ஆவார். அவரது பெயர் ஹமூத் அலி அல் கல்தாமி என்பதாகும்.அவரது மரணத்தை சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தங்களின் ஒரு விமானம் சேதமடைந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications
