காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் காவலாளியாக பணியாற்றி வரும் நேபாளத்தை சேர்ந்த 26 வயது இளைஞருக்கு 'தி யுஏஇ லாட்டரி' குலுக்கலில் ரூ.78 கோடி பரிசு விழுந்தது. ஏழை குடும்பம், கடன் வாங்கி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு காவலாளி பணிக்கு சென்ற அவரது வாழ்க்கையை இந்த லாட்டரி ஒரே நாளில் இப்போது கோடீஸ்வரராக மாற்றி உள்ளது. இதனால் சொல்ல முடியாத அளவுக்கு ஹேப்பியாகி உள்ள அந்த காவலாளி தனது பரிசு தொகையின் பணத்தை நண்பர்களுக்கு பிரித்து வழங்குவதாகவும், சொந்தமாக 'தார்' கார் வாங்கி தொழில் செய்ய உள்ளதாகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
நேபாளத்தை சேர்ந்தவர் தயாப் கான். இவருக்கு வயது 26. இவர் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் அவர் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்கு அவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளது. அதிர்ஷ்டம் கைக்கொடுத்தால் தனது வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கி வந்தார்.
இநு்நிலையில் தான் தயாப் கான் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து 'தி யுஏஇ லாட்டரி' வாங்கினார். அதற்கு தற்போது 30 மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் ரூ.70 கோடி) பரிசு விழுந்துள்ளது. இதனால் தயாப் கான் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார். அவரது மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாமல் துள்ளி குதித்தார்.
இதுபற்றி தயாப் கான் கூறுகையில், ''நான், எனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து லாட்டரி வாங்கினேன். நாங்கள் ஒவ்வொரு வாரமும் சேர்ந்து லாட்டரி வாங்குவோம். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் லாட்டரி எண்களை தேர்வு செய்வோம். இப்போது ரூ.70 கோடி பரிசு விழுந்துள்ளது. இதனை சமமாக பிரித்து கொள்வோம். அதன்படி ஒருவருக்கு ரூ.15 கோடி வரை கிடைக்கும்.
எனக்கு பரிசு விழுந்ததை முதலில் என்னால் நம்ப முடியவில்லை. இதற்கு முன்பு சிறிய பரிசுகள் வென்றபோது இ-மெயில் வந்துள்ளன. ஆனால் ரூ.70 கோடி பரிசாக விழுந்ததை பார்த்ததும் கால்கள் நடுங்க தொடங்கின. இது ஒரு கனவு போல் இருந்தது. இன்னும் கூட என்னால் நம்ப முடியவில்லை.
என் குடும்பம் ஏழ்மையானது. இதனால் நல்ல இடத்தில் சொகுசு வீடு கட்ட முடிவு செய்துள்ளேன். இந்த பணத்தை வைத்து குழந்தைகளின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்வேன். கடன்கள் உள்ளது. அதனை அடைக்க இருக்கிறேன். பல வருடங்களாக வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட 'மஹிந்திரா தார் கார், விலையுயர்ந்த கைக்கடிகாரம் வாங்க திட்டமிட்டுள்ளேன். இனி காவலாளி பணியை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கவும், முதலீடுகள் செய்யவும் முடிவு செய்துள்ளேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications