₹100 கோடி மதிப்புள்ள துபாய் வில்லா.. ஒரு ரூபாய் கூட செலழிக்காமல் ஷாருக்கானுக்கு கிடைத்தது எப்படி!

Subscribe to Oneindia Tamil

துபாய்: பாலிவுட்டின் 'கிங் கான்' ஷாருக்கான் ஓய்வெடுக்க செல்லும் இடம் எது தெரியுமா? அதுதான் துபாயில் உள்ள அவரது பிரமாண்ட சொகுசு வில்லா 'ஜன்னத்'. உலகப் புகழ்பெற்ற பாம் ஜுமேராவில் அமைந்துள்ள இந்த கடற்கரை வில்லாவில்.. கடற்கரை, நீச்சல் குளம் என திரும்பிய பக்கமெல்லாம் பிரம்மாண்டம் தான். ஆனால், இந்த சொகுசு வில்லாவை ஷாருக்கான் ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லையாம்.

பாலிவுட் பாட்சா ஷாருக்கான், இந்தி பட உலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்து வருகிறார். 60 வயதானாலும் கூட இன்னுமே பாலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் ஷாருக்கான் ஓய்வெடுக்க செல்லும் இடம் தான் ஜன்னத். துபாயின் அடையாளமாக விளங்கும் செயற்கைத் தீவான பாம் ஜுமேராவில் தான் இந்த ஜன்னத் அமைந்துள்ளது.

Shah Rukh Khan Dubai Villa Shah Rukh Khan Dubai

ஜன்னத் வில்லா

தனியார் வில்லாக்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் அழகிய கடற்கரைகளுக்கு பெயர் பெற்ற இந்த பகுதியில் சுமார் 14,000 சதுர அடி பரப்பளவில் ஜன்னத் அமைந்துள்ளது. இதில் தான் இரண்டு தளங்களுடன் கூடிய 8,500 சதுர அடி பரப்பளவிலான பிரமாண்ட வில்லா கட்டப்பட்டுள்ளது.

ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை

இந்த வில்லாவின் மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இதற்காக ஷாருக்கான் ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை. ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை என்றால் எப்படி இது ஷாரூக்கிடம் வந்தது என்ற கேள்வி வரும். பாம் ஜுமேரா திட்டத்தை உருவாக்கிய துபாயின் நக்ஹீல் நிறுவனம், 2007ஆம் ஆண்டு இந்த வில்லாவை ஷாருக்கானுக்கு பரிசாக வழங்கியது. துபாயை சர்வதேச சுற்றுலா மையமாக விளம்பரப்படுத்த அவர் செய்த பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஷாருக்கானும், இந்த வில்லாவை தான் நேரடியாக வாங்கவில்லை.. கிப்ட் தான் என்பதை பலமுறை தெரிவித்துள்ளார்.

'ஜன்னத்' என்றால் சொர்க்கம் என்று பொருள். கிட்டத்தட்ட பூமியில் இருக்கும் சொர்க்கம் போல தான் இந்த வில்லா வடிவமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாளிகை, அரபு பாரம்பரிய கட்டிடக்கலையையும், நவீன ஐரோப்பிய உட்புற வடிவமைப்பையும் இணைத்து கட்டப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்க்கும்போதே அமைதியான கடற்கரை மாளிகை போன்ற தோற்றத்தை தருகிறது.

பிரம்மாண்டம்

இந்த வில்லாவின் மற்றொரு சிறப்பு, அதன் உட்புறம். ஷாருக்கானின் மனைவியும் பிரபல இன்டீரியர் டிசைனருமான கவுரி கான், வீட்டின் ஒவ்வொரு அறையையும் தனிப்பட்ட முறையில் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். ஆடம்பரத்தையும், நேர்த்தியையும் இணைக்கும் வகையில் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜன்னத் வில்லா வசதிகள்

இந்த வில்லாவில் பல்வேறு சொகுசு வசதிகள் இடம்பெற்றுள்ளன. சுமார் 6 பெரிய படுக்கையறைகள், தனி நீச்சல் குளம், நேரடியாக பிரைவேட் கடற்கரைக்கு செல்லும் வசதி, அழகிய தோட்டம், மிக பெரிய வரவேற்பு அறைகள், ரிமோட் மூலம் இயக்கப்படும் கேரேஜ்கள், அரேபியக் கடல் மற்றும் துபாய் நகரத்தின் பிரமாண்ட காட்சியை ஜன்னத் வில்லாவில் இருந்தபடியே பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினருடன் அமைதியாக விடுமுறை கழிக்கவும், நண்பர்களுடன் கொண்டாடவும் ஏற்ற வகையில் இந்த வில்லா வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஷாரூக் ரசிகர்கள்

பாம் ஜுமேரா பகுதிக்கு சென்று 'ஜன்னத்' வில்லாவை வெளியில் இருந்து பார்க்க முடியும். ஆனால், உள்ளே செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும், துபாய்க்கு செல்லும் ஷாருக்கான் ரசிகர்கள் பலரும், அவரது புகழ்பெற்ற இல்லத்தை ஒரு முறை நேரில் பார்ப்பதற்காக பாம் ஜுமேராவுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஜன்னத் வில்லா முன்பு நின்று போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

உலகின் பல பகுதிகளில் ஷாருக்கான் சொகுசு வீடுகளை வைத்திருந்தாலும், துபாயில் ஜன்னத் வில்லா, அதன் பிரமாண்டம் மற்றும் தனித்துவமான வடிவமைப்பால் எப்போதும் தனித்து நிற்கிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+